Artwork: Jack Forbes
Artwork: Jack Forbes

உடல் சார்ந்த (physical) மற்றும் டிஜிட்டல் (digital) பாதுகாப்பு: குடிமை சீர்கேடு

ஜுலை 20ää 2021 அன்று புதுப்பிக்கப்பட்டது.

கூட்ட வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து அறிக்கையிடுவது ஆபத்தானது. வன்முறை ரீதியான எதிர்ப்புகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை அந்த இடங்களிலிருந்து அறிக்கையிடும் போது பல ஊடகப் பணியாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் காயமடைகின்றனர். 

அபாயத்தைக் குறைக்க, ஊடகப் பணியாளர்கள் பின்வரும் பாதுகாப்பு ஆலோசனைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்:  

பணி திட்டமிடல் 

 • யார் கலந்துகொள்வார்கள் மற்றும் ஊடகங்கள் மீதான அவர்களின் மனோநிலையைக் கண்டறியவும் (உதாரணம்: தீவிரவாத குழுக்கள்ää எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள்ää ஆயுதமேந்திய காவலர்கள்ää கலகப் பிரிவு பொலிஸார்).
 • இருப்பிடம் மற்றும் முக்கிய தப்பிக்கும் வழிகளை அடையாளம் கண்டுää இருப்பிடத்தின் அமைப்பை ஆராய்ந்து புரிந்து கொள்ளுங்கள்.
 • அவசர காலத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்ää எங்கு செல்வீர்கள் என்று சிந்தியுங்கள்.
 • இரவு நேரங்களில் வேலை செய்வது ஆபத்தானது மற்றும் முடிந்தவரை அது தவிர்க்கப்பட வேண்டும். 
 • இரவில் தங்கினால்ää ஆபத்தான இருப்பிடங்களில் இருந்து பாதுகாப்பான தூரத்தில் உள்ள ஒரு இடத்தை தேர்ந்தெடுக்கவும்.
 • வைத்திய உதவியின் மிக அருகில் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து கொள்ளவும்.
 • மேலதிக தகவல்களுக்கு CPJவின் பணித் திட்டமிடல் வளங்கள் ஆலோசனையைப் பார்க்கவும். 

பணியாளர்கள் பற்றிய பரிசீலனைகள்;

 • ஒரு தனிநபரின் சுயவிபரம்ää பால்நிலைää இனம் அல்லது பாலியல் நோக்குநிலை ஆகியவை அந்த இடத்திலுள்ள எந்தவொரு விரோதமான செயற்பாட்டாளர்களும்  அவர்களை இலக்காகக் கொள்ள முடியுமா என்பதைக் கவனியுங்கள்.  
 • களத்திற்கு சென்று அறிக்கையிடுபவர்கள் அவர்களுக்குப் பதிலளிப்பதற்கும்ää அதிகரிக்கும் ஆபத்துக்களுக்கு விரைவாகச் செல்லவும் அனுமதிக்கும் வகையில் உடல் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.     
 • தனிநபர்கள் தனியாக வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது.  எப்பொழுதும் சக ஊழியருடன் பணிபுரிய முயற்சிக்கவும். அத்துடன் அவசர சந்திப்பில் உடன்படவும். மேலும் தகவலுக்கு, CPJ  இன் தனி அறிக்கையிடல் ஆலோசனையைப் பார்க்கவும்.  

தொடர்பு

 • உங்கள் அலுவலகம்ää குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் வழக்கமாக நுழைவதற்குரிய (check-in) நடைமுறையை அமைக்கவும்.
 • காயம் ஏற்பட்டால் அல்லது கைது செய்யப்பட்டால்ää உதவிக்கு யாரை அழைக்க வேண்டும் (உதாரணம்: சட்டப் பிரதிநிதி) என்பது உள்ளிட்ட விபரங்கள் உட்பட அவசரகால நெறிமுறைகளை வைக்கவும். மேலதிக தகவலுக்கு CPJவின் கைது மற்றும் தடுப்புக் குறிப்பைப் பார்க்கவும்.
 • உங்களைச் சுற்றி என்ன நடக்கின்றது மற்றும் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் குறித்து உங்களுக்குத் தெரியப்படுத்த உதவும் பின்கண்காணிப்பாளரின் (backwatcher) தேவையை கருத்திற் கொள்ளுங்கள். 

ஆடை மற்றும் உபகரணங்கள்

 • நீங்கள் வேகமாக நகர உதவும் லேஸ்கள் (laces) கொண்ட ஆடை மற்றும் காலணிகளை அணியுங்கள்.
 • கழுத்தில் அணியும் ஆபரணங்கள், தாவணிகள், lanyards மற்றும் ponytails மற்றும் நைலோன் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை அணிவதைத் தவிர்க்கவும்.
 • வன்முறை எதிர்பார்க்கப்படும் இடங்களில், பாதுகாப்பு கண்ணாடிகள்/கண்ணாடிகள், கண்ணீர்ப்புகை சுவாசக் கருவிகள் மற்றும் தலைக்கவசங்கள் பயன்படுத்துவதைக் கருத்தில் கொள்ள வேண்டும். நேரடி வெடிமருந்துகள் ஆபத்தாக இருந்தால், பாதுகாப்பான உடல் உள்ளாடைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். மேலதிக தகவலுக்கு, CPJ இன் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) வழிகாட்டியைப் பார்க்கவும்.
 • உங்கள் கைப்பேசியில் பேட்டரி முழுமையாக (full battery) இருப்பதை உறுதிசெய்து, ஒரு சிறிய சார்ஜரை (charger) உங்களுடன் எடுத்துச் செல்லவும்.
 • குடிநீர், உந்து சக்தியுடைய பானங்கள் மற்றும் முதலுதவிப் பெட்டி போன்ற உங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்களைக் கருத்திற்கொள்க. 
 • உங்களிடமுள்ள விலை மதிப்புமிக்க பொருட்களை பயன்படுத்துவதை குறைக்கவும். 

போக்குவரத்து

 • அனைத்து பயணங்களையும் முன்கூட்டியே திட்டமிட்டு இலகுவானதொரு பயணத்திட்டத்தை தயாரித்துக் கொள்க. வீதி மூடல்கள் மற்றும் தடைகள் காரணமாக பயணம் தடைப்படக்கூடிய நிலைகள் ஏற்படலாம் என்பதை கவனத்திற் கொள்ளவும்.
 • உங்கள் வாகனத்தை எப்போதும் தப்பித்துச் செல்லக்கூடிய வகையில் வசதியான மற்றும் பாதுகாப்பான இடத்தில் நிறுத்துங்கள். அல்லது  போக்குவரத்திற்கான பாதுகாப்பான மாற்று வழிமுறையொன்றிருப்பதை உத்தரவாதப்படுத்திக் கொள்ளுங்கள்.
 • வாகனங்களில் எந்தவொரு உபகரணத்தையும் விட்டுச் செல்ல வேண்டாம். இரவு நேரங்களில்ää குற்றச்செயல்கள் அதிகரிக்கக்கூடிய அபாயம் காணப்படுகின்றது. 

நிலைப்பாடு 

 • எப்பொழுதும் நீங்கள் இருக்கும் இடத்தை கவனியுங்கள். மின் உயர்த்தி வசதியுடன் கூடிய கட்டடத்தின் முன்பாகத்திற்கு (Balcony) செல்லக்கூடியவாறு அதிக பாதுகாப்பை வழங்கக்கூடிய இடத்தைக் கண்டறிய முயற்சிக்கவும்.
 • கட்டிடம் அல்லது கூரையுடன் கூடிய கட்டமைப்பு போன்ற தங்குமிடங்களுக்கு அருகாமையில் இருங்கள் – ஆனால் கண்ணாடியுடன் கூடிய கட்டிடங்களிலிருந்து  தொலைவில் இருங்கள்.
 • சூழ்நிலைகள் சிக்கலாக அல்லது எதிராக இருந்தால், வெளியேறுவதற்கான பல வழிகளைத் திட்டமிடுங்கள். இருப்பிடத்தின் வரைபடங்களைச் சரிபார்ப்பதன் மூலம் அதனை செய்யுங்கள். மேலும் அந்த இடத்திற்கு வந்தவுடன் மீண்டும் திட்டத்தைச் செயல்படுத்தவும். இது உள்ளூர் சூழ்நிலைகளின் அடிப்படையில் மாற்றப்பட வேண்டியிருக்கும் (உதாரணம்: வீதி மூடல்கள்).
 • ஒரு கூட்டத்தில் அல்லது அருகில் பணிபுரியும் போது ஒரு மூலோபாயத்தைத் திட்டமிடுங்கள். மேலும் சாத்தியமான அனைத்து தப்பிக்கும் வழிகளையும் அடையாளம் காணவும். கூட்டத்திற்கு வெளியே இருக்க முயற்சி செய்யுங்கள். மற்றும் நடுவில் இருப்பதனை தவிர்த்துக் கொள்ளுங்கள். நடுவில் இருந்தால் தப்பிப்பது கடினமாக இருக்கும். 

விழிப்புணர்வு

 • குறிப்பாக தீவிரவாதிகள், பாதுகாப்புப் படைகள் மற்றும் முக்கியமான அரசத் தளங்கள் மற்றும் உட்கட்டமைப்பு போன்றவற்றைச் சுற்றி படம் எடுக்கும்போது எப்போதும் விவேகத்தைப் பயன்படுத்தவும்.
 • நொறுக்கப்பட்ட கண்ணாடி, விழுந்து கிடக்கும் குப்பைகள் மற்றும் நெருப்பு  வைப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
 • எந்தவொரு கூட்டத்திலும் நுழைவதற்கு முன்பு குறைந்த சுயவிபரத்தை பராமரித்து ஊடகங்களை நோக்கிய ஆர்ப்பாட்டக்காரர்களின் மனநிலையை ஊகித்துக் கொள்ளுங்கள்.
 • நெரிசல்களின் அச்சுறுத்தல் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். குறிப்பாக கண்ணீர்ப்புகை பயன்படுத்தப்பட்டால் எச்சரிக்கையாக இருங்கள். 
 • அதிகாரிகளின் மனநிலை மற்றும் நடத்தையை தொடர்ந்து கவனித்து பார்க்கவும்.  கலவர தடுப்புக் கருவிகள், கேடயச் சுவர்கள் அல்லது எறிகணைகளை எறிதல் போன்ற காட்சிக் குறிப்புகள் ஆக்கிரமிப்பை எதிர்பார்க்கக்கூடிய சாத்தியமான குறிகாட்டிகளாகும். அத்தகைய “சிவப்புக் கொடிகள்” தெளிவாகத் தெரிந்தால், பாதுகாப்பான இடத்திற்குத் செல்லவும். 

கண்ணீர்ப்புகை பயன்படுத்தப்படும் சூழ்நிலைகளில்:

 • கண்ணீர்ப்புகை முகக்கவசம், தலைக்கவசம் மற்றும் கண் பாதுகாப்பு உள்ளிட்ட தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணியவும்.
 • காண்டாக்ட் லென்ஸ்கள் (Contact lenses) பயன்படுத்துவது நல்லதல்ல.
 • சருமத்திற்கு பயன்படுத்தும் தயாரிப்புகளை (உதாரணம்: ஒப்பனை அல்லது moisturizer) அணிவதைத் தவிர்க்கவும். குறிப்பாக எண்ணெய் சார்ந்ததாக இருப்பதை தவிர்க்கவும். 
 • ஆஸ்துமா அல்லது சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள் கண்ணீர்ப்புகை பயன்படுத்தப்படும் பகுதிகளை தவிர்க்க வேண்டும்.
 • நீங்கள் பார்ப்பதற்கு சிரமப்பட்டால், ஒரு பகுதியை விட்டு வெளியே செல்ல உதவும் அடையாளங்களை (உதாரணம்: அடையாள இடுகைகள், தடைகள், தண்டவாளங்கள்) கவனத்தில் கொள்ளுங்கள்.  
 • நீங்கள் கண்ணீர்ப்புகைக்கு உள்ளானால், காற்றானது புகையை எடுத்துச் செல்ல அனுமதிக்கும் வகையில் உயரமான இடத்தைக் கண்டுபிடித்து சுத்தமான காற்று உள்ள இடத்தில் நிற்க முயற்சிக்கவும். உங்கள் கண்கள் அல்லது முகத்தை தேய்க்க வேண்டாம். உங்களால் முடிந்தால், உங்கள் சருமத்திலிருந்து புகையைக் கழுவ குளிர்ந்த நீரில் கழுவவும். ஆனால் குளிக்க வேண்டாம். படிகங்களை முழுவதுமாக அகற்ற, அல்லது அப்புறப்படுத்த ஆடைகளை பலமுறை கழுவ வேண்டியிருக்கும். 

ஆக்கிரமிப்பைக் கையாள்வது:

 • உடலின் மொழியைப் படித்து, உங்கள் சொந்த உடல் மொழியைப் பயன்படுத்தி சூழ்நிலையை அமைதிப்படுத்துங்கள்.
 • ஆக்கிரமிப்பாளருடன் நேரடியான கண் தொடர்பு வைத்துக் கொள்ளுங்கள். திறந்த கை சைகைகளைப் பயன்படுத்துங்கள் மற்றும் அமைதியான முறையில் பேசுங்கள்.
 • அச்சுறுத்தல் இருக்கும் இடத்தில் இருந்து நீட்டிய கையின் நீளத்தை வைத்திருங்கள். யாராவது உங்களைப் பிடித்தால், ஆக்கிரமிப்பு இல்லாமல் உறுதியாக பின் வாங்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கு அருகாமையில் மற்றும் மூலை முடுக்குகளில் ஆபத்து இருந்தால் கத்துங்கள். 
 • தாக்குதல் நிலைமை அதிகரித்தால், உங்கள் தலையைப் பாதுகாக்க ஒரு கையை தயாராக வைத்திருங்கள் மற்றும் மெதுவாக நகரவும். விழுவதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும். ஒரு குழுவாக இருந்தால், ஒன்றாக இணைந்து கைகளை கோர்த்துக் கொள்ளவும். 
 • நிலைமை மற்றும் உங்கள் சொந்த பாதுகாப்பு குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.  ஆக்கிரமிப்பை ஆவணப்படுத்தி, செய்தி திரட்டும் நேரங்களில், ஆக்கிரமிப்பு நபர்களின் படங்களை எடுப்பது ஒரு சூழ்நிலையை அதிகரிக்கலாம்.

டிஜிட்டல் பாதுகாப்பு

சிவில் சீர்கேட்டை அறிக்கையிடும் போது உங்கள் சாதனங்கள் உடைக்கப்படும் மற்றும் திருடப்படும் அல்லது பறிமுதல் செய்யப்படும் அபாயம் உள்ளது. அபாயத்தைக் குறைக்க, பின்வரும் பாதுகாப்பு ஆலோசனைகளைக் கவனியுங்கள்: 

 • பணிக்கு வெளியே செல்லும் முன் உங்கள் சாதனங்களை காப்புப் பிரதி (backup) எடுக்கவும். உங்கள் கையடக்கத் தொலைபேசியில் உள்ள உள்ளடக்கத்தின் காப்பு பிரதியை உருவாக்குவதும் இதில் அடங்கும்.
 • உங்கள் சாதனங்களை ரிமோட் துடைப்பிற்கு (remote wipe) முன்பே அமைக்கவும்.  இது உங்கள் சாதனத்தில் உள்ள உள்ளடக்கம் திருடப்பட்டாலோ அல்லது உங்களிடமிருந்து எடுக்கப்பட்டாலோ அதை நீக்க உங்களை அனுமதிக்கும்.  இணையம் அல்லது மொபைல் டேட்டா (mobile data)  அணுகினால் மட்டுமே சாதனம் நீக்கப்படும். 
 • உங்கள் சாதனங்களில் என்ன தரவு உள்ளது மற்றும் எங்கே சேமிக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். பிறர் அணுகுவதை நீங்கள் விரும்பாத தரவை அகற்ற நடவடிக்கை எடுக்கவும். இதில் தொழில் தொடர்பான ஆவணங்கள் அல்லது உங்கள் குடும்பத்தின் புகைப்படங்கள் இருக்கலாம். உங்களிடம் உதிரி தொலைபேசி இருந்தால் (spare phone), அதை பயன்படுத்திக் கொண்டு உங்கள் தனிப்பட்ட தொலைபேசியை கொண்டு செல்வதை தவிர்க்கவும். அந்த தொலைபேசியில் உங்களைப் பற்றிய அல்லது உங்கள் ஆதாரங்களைப் பற்றிய வரையறுக்கப்பட்ட தனிப்பட்ட தகவல்கள் இருப்பதை உறுதி செய்யவும். 
 • செய்தியிடல் பயன்பாடுகளில் எவ்வாறான உள்ளடக்கம் சேமிக்கப்பட்டுள்ளது என்பதை மதிப்பாய்வு செய்து, செய்திகள், ஆவணங்கள் மற்றும் புகைப்படங்கள் உட்பட மற்றவர்கள் வாசிக்கக்கூடாது என்று நீங்கள் நினைக்கும் எதையும் நீக்க நடவடிக்கை எடுக்கவும். Signal அல்லது WhatsApp போன்ற என்ட்-டு-எண்ட் (end-to-end) செய்திகளை பகிரும் Apps பயன்படுத்துவதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். இரண்டு காரணி அங்கீகாரத்தை அமைப்பதும், செய்திகள் மறைந்து போகச் செய்வதும் போன்றன தற்போது இந்த Apps பயன்படுத்துவதற்கான சிறந்த நடைமுறையில் அடங்கும். Apps செட்டிங்ஸ் பிரிவில் இதைச் செய்யலாம்.   
 • உங்கள் தொடர்புப் பட்டியலை மதிப்பாய்வு செய்து, உணர்திறன் (Sensitive) கொண்ட தொடர்புகளை நீக்கவும்.  தொலைபேசி மற்றும் சிம் அட்டை (SIM Card) இல் உள்ள Apps அமைக்கப் பயன்படுத்தப்படும் மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்ட கிளவுட் (cloud) கணக்கில் தொடர்புகள் சேமிக்கப்படும்.  
 • செய்தியை அல்லது கதையை அறிக்கைப்படுத்தும் (report) போது உங்களுக்குத் தேவையில்லாத Apps மற்றும் சேவைகளை நீக்கவும். எவராவது உங்கள் சாதனத்தை அணுகினால், உங்கள் கணக்குகளை அணுகுவதிலிருந்து இது சிறப்பாகப் பாதுகாக்கும். 
 • உங்கள் தொலைபேசியை பூட்டுவதற்கும் (lock) திறப்பதற்கும் (unlock) சிறந்த வழியைக் கண்டறியுங்கள்.  பயோமெட்ரிக்ஸ் (biometrics) ஆனது அறிக்கைப்படுத்தும் போது உங்கள் தொலைபேசியை திறப்பதை எளிதாக்குகிறது. இருப்பினும், இது மற்றவர்களுக்கும் எளிதாகத் திறக்கலாம். உதாரணமாக, தொலைபேசியில் உங்கள் கட்டை விரலை இறுக்கமாக அழுத்துவதன் மூலம் திறக்கலாம். உங்கள் சாதனத்தை மற்றவர்கள் அணுகுவதைப் பற்றி நீங்கள் சிந்திக்கின்றீர்கள் என்றால், நீண்ட இரகசிய குறியீட்டை (PIN code) வைப்பது உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கலாம்.  
 • உள்நாட்டு சிவில் அமைதியின்மை குறித்த இருப்பிட அறிக்கையிடலின் போது, cloud, messaging apps அல்லது மின்னஞ்சல் வழியாக அல்லது HD Card  போன்ற வெளிப்புற சாதனத்தில் வழக்கமான காப்புப் பிரதிகளை உருவாக்குவது நல்லது. உங்கள் சாதனங்கள் அழிக்கப்பட்டாலோ அல்லது எடுக்கப்பட்டாலோ தரவு இழக்கப்படுவதை இது தடுக்கும். 
 • நீங்கள் லைவ் ஸ்ட்ரீமிங் (live streaming) செய்கிறீர்கள் என்றால், உங்கள் இருப்பிடம் இணையத்தில் நிகழ்நேரத்தில் ஒளிபரப்பப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். இது உங்களை உடல் ரீதியான பாதுகாப்பு தொடர்பான விடயத்திற்கு ஆளாக்குகிறது. 
 • தகவல்தொடர்பு முடக்கம் ஏற்பட்டால், தொலைபேசி சேவை மற்றும் இணைய இணைப்பை இழந்தால், மற்றவர்களை எவ்வாறு தொடர்புகொள்வது என்று திட்டமிடுங்கள். மேலதிக தகவலுக்கு, இணைய முடக்கம் குறித்த CPJ இன் பாதுகாப்புக் குறிப்பைப் பார்க்கவும்.
 • உங்கள் சாதனங்கள் மற்றும் தகவல்தொடர்புகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றி மேலும் அறிய, CPJ இன் டிஜிட்டல் பாதுகாப்பு கருவியைப் பார்க்கவும்.

மேலதிக தகவல் மற்றும் முன் ஒதுக்கீட்டுத் தயாரிப்பு மற்றும் சம்பவத்திற்குப் பிந்தைய உதவிக்கான கருவிகளுக்கு, CPJ இன் வள மையத்தைப் பார்வையிடவும்.