கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கேட்டு அரசாங்கங்கள் மீது குற்றம் சாட்டும் மக்கள் நியாய சபை

தி ஹேக்,(The Hague) 28 செப்டம்பர் 2021- ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதில் நீதி பெற முன்னெப்போதும் இல்லாத முயற்சியில், மூன்று முன்னணி பத்திரிகை சுதந்திரக் குழுக்கள், அவர்களது கொலைகளை விசாரிக்கவும் சம்பந்தபட்ட அரசாங்கங்களை பொறுப்பேற்கவும் மக்கள்  நியாய சபையை நிறுவியுள்ளன.  நியாய சபை என்பது அடித்தள நீதியின் ஒரு வடிவம். இது மூன்று நாடுகளில் குறிப்பிட்ட வழக்குகள் சம்பந்தப்பட்ட விசாரணைகள் மற்றும் உயர்தர சட்ட பகுப்பாய்வுகளை நம்பியுள்ளது. நவம்பர் 2 ம் திகதி ஹேக்கில் தொடக்க விசாரணை நடைபெறும்.

உலகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது. 1992 முதல், 1400 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும்  பத்தில் எட்டு வழக்குகளில் ஒரு பத்திரிகையாளராவது கொல்லப்பட்டு இருப்பார், ஆனால் கொலையாளிகளோ விடுதலையாவர்.  பத்திரிகையாளர்கள் மீதான வன்முறை சுழற்சிக்கு எதிராக, எந்தவித தொடர்ச்சியான உயர் மட்ட தண்டனையின்மையானது  நிலைநிற்பதால், கருத்து சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது.

நீதியை நோக்கிய ஒரு முக்கிய உந்துதலில், முன்னணி பத்திரிகை சுதந்திர அமைப்புகளான  வரையறையற்ற பத்திரிகை சுதந்திரம் (Free Press Unlimited), எல்லைகள் இல்லாத நிருபர்கள் (Reporters Without Borders – RSF) மற்றும் பத்திரிக்கையாளர்களைப் பாதுகாக்கும் குழு (Committee to Protect Journalists -CPJ), இவ்வாறான பத்திரிக்கையாளர்கள் கொலைகளில் மக்கள் நியாய சபையை கூட்டவேண்டும் என்று நிரந்தர மக்கள் நியாய சபையை கோரியது.

மக்கள் நியாய சபை சர்வதேச சட்ட மீறல்களுக்கு மாநிலங்களை பொறுப்பேற்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் நிமித்தம்,  பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும் முறையான சான்றுகள் பதிவை உருவாக்குவதன் மூலமும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் மற்றும் அவர்களின் கதைகளைப் பதிவு செய்வதிலும் மக்கள் நியாய சபை முக்கிய பங்கு வகிக்கிறது. லசந்த விக்கிரமதுங்க, மிகுவல் ஏஞ்சல் லோபஸ் வெலாஸ்கோ மற்றும் நபில் அல்-ஷர்பாஜி ஆகியோரின் கொலைகளுக்கு  உரிய நீதி வழங்கத்தவறியமைக்காக இலங்கை, மெக்ஸிகோ மற்றும் சிரியாவின் அரசாங்கங்களுக்கு எதிராக மக்கள் நியாய சபை குற்றஞ்சாட்டும்,

புகழ்பெற்ற மனித உரிமை வழக்கறிஞர் அல்முடேனா பெர்னாபியு (Almudena Bernabeu) தொடக்க விசாரணைக்கு வழக்கை வழிநடத்துவார்.  சட்ட வல்லுனர்களின் உயர் மட்ட குழு ஷாஸ் கியூசி (Shaws QC) உறுப்பினரான பரோனஸ் ஹெலினா கென்னடியால் (Baroness Helena Kennedy) ஊடக சுதந்திரம் குறித்து ஒரு முக்கிய உரை நிகழ்த்துவார்.

2018-இல் கொலை செய்யப்பட்ட சவூதி பத்திரிகையாளர் ஜமால்  காஷோகியை மணமுடிக்க இருந்த கல்வியாளர் (Hatice Cengiz) முக்கிய சாட்சியம் அளிப்பார். மேலும், மால்டிஸ் (Maltese)பத்திரிகையாளர் டாப்னே கருவானா கலிசியா   மகன் மேத்யூ கருவானா கலிசியா (Matthew Caruana Galizia), பத்திரிகையாளர் 2017 ல் கொலை செய்யப்பட்டார். பாவ்லா ஹோல்கோவா (Pavla Holcoa), புலனாய்வு பத்திரிகையாளர் மற்றும் சகஊழியரான ஸ்லோவாக் (Slovak) பத்திரிகையாளர் ஜான் குசியாக் (Jan Kuciak) 2018 இல் கொல்லப்பட்டார்.  இக்கொலைகள் உட்பட பல முக்கிய சாட்சியாளர்கள் சான்று பகரவுள்ளனர்.

தொடக்க விசாரணையானது 09:00 முதல்  – 18:00 மணிவரை  செவ்வாய்க்கிழமை 2 ஆம் திகதி நவம்பர் மாதம் 2021ல்  மத்திய ஐரோப்பியம், ஹேக்கில்(Hague) நடைபெறும். மற்றும்  நேரில் கலந்து கொள்ள  [email protected]. மின்னஞ்சல் மூலமும் அல்லது நேரடிஒளிபரப்புக்கு  http://saferworldforthetruth.com/tribunal

வழியாகவும் இணைந்து கொள்ளலாம்.

வரையறையற்ற சுதந்திர பிரசுர பத்திரிகை (FPU) கொள்கை & திட்டங்கள்  பணிப்பாளர் லியோன் விலெம்ஸ் (Leon Wilems) கூறுகிறார்.

“பல துணிச்சலான பத்திரிகையாளர்கள் தங்கள் முக்கிய வேலையைச் செய்ததற்காக கொலை செய்யப்பட்டனர்: அதாவது உண்மையை எடுத்தியம்பியமைக்காக.  இந்த கொடூரமான குற்றங்களுக்கு மக்கள் நியாயசபை நீதி கோருகிறது. மற்றும் ஊடகவியலாளர்களின் கொலைகளுக்கு தண்டனை வழங்குவதற்காக மாநிலங்கள் தங்களை தக்கநிலையில் வடிவமைத்து குற்றவாளிகள்  மற்றும் குற்றவியலுக்கு பொறுப்பானவர்கள் உடந்தையானவர்கள் தண்டனைகளிலிருந்து தப்பியாவண்ணம் செயல்பட உருவாக்குகிறது. அந்த நல்லெண்ணத்தின் உருவானதுதான் ‘உண்மையின் பாதுகாப்பான உலகம்’.”

பத்திரிக்கையாளர்களைப் பாதுகாக்கும் (CPU) குழுவின்  நிர்வாக இயக்குனர் ஜோயல் சிமியோன் (Joel Simon) கூறுகிறார்:

“இந்த துணிச்சலான பத்திரிகையாளர்களுக்கு நீதி கோருவதற்கு நியாயசபையின்  பங்கு முக்கியமானது, ஆனால் அது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கும் தங்கள் சொந்த கதைகள் மற்றும் இந்த கொடூரமான கொலைகளின் தாக்கத்தை பேசவும் பகிர்ந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பு கொடுக்கிறது. இந்த பத்திரிகையாளர்கள், தங்கள் கதைகளை தங்கள் மறைவிற்கு பின்னும் உயிருடன் வைத்திருக்க அயராது உழைத்திருக்கிறார்கள், பெரும்பாலும் அச்சுறுத்தல்கள் மற்றும் தொல்லைகளுக்கு முகம்கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது,  அவர்களின் குரல்களோ தண்டணையிலிருந்து தப்பிக்க முயற்சிப்போருக்கு எதிராக குரூரமான முறையில் ஒலிக்கிறது.”

எல்லைகள் இல்லாத நிருபர்கள் (RSF)  பொதுச் செயலாளர் ,கிறிஸ்டோஃப் டெலோரி (Christophe Deloire)  கூறுகிறார்:

“நவம்பர் 2 ஆம் திகதி முதல் விசாரணை ஆரம்பமாகிறது, அது பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச தினத்தைக் குறிக்கிறது. இந்த முன்முயற்சி அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிடுதல் அல்லது அவமானப்படுத்துதல் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு, இது திகிலானமுறையில் தண்டனையிலிருந்து தப்பும் அளவை கட்டுப்படுத்துகிறது. அதாவது நீதித்துறையானது என்ன செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு உறுதியான மற்றும் பயனுள்ள உதாரணமாக விளங்கச்செய்வதேயாகும். “

பத்திரிகை நிருபர்களின் கொலை தொடர்பாக மக்கள் நியாயசபையின் வழக்கறிஞர் அல்முதெனா பெர்னாபூ (Almudena Bemabeu) கூறுகிறார்:

“கருத்து சுதந்திரம் என்பது மனிதனின் அடிப்படை உரிமை. இன்னும், ஊடகவியலாளர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் கடுமையான வன்செயல்கள், மற்றும் மீறல்கள் ஆனது அதிக அளவில் தண்டனையின்றி இருப்பதுவேயாகும் என்பதனை கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. எனவே, மாநிலங்கள் பொறுப்பேற்க வேண்டிய நேரம் இதுவேயாகும்.”

முற்றும் [ENDS]

ஆசிரியர்களுக்கான குறிப்புகள் (வெளியீட்டிற்காக அல்ல):

உண்மையின் பாதுகாப்பான உலகம் என்பது வரையறையற்ற பத்திரிகை சுதந்தரம் (FRC), எல்லைகள் இல்லாத நிருபர்கள் (RSF) மற்றும் பத்திரிக்கையாளர்களைப் பாதுகாக்கும் குழு (CPJ) ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பாகும். திட்டம் பற்றி மேலும் அறிய, எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடவும்: https://www.saferworldforthetruth.com/.

மேலும் தகவலுக்கு, தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்:

வரையறையற்ற பத்திரிகை சுதந்தரம் (FRC), ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்து:

மாயா முல்லர், பத்திரிகை அதிகாரி. [email protected] அல்லது +31 6 82 09 12 09 ஐ அழைக்கவும். டச்சு, பிரஞ்சு, ஜெர்மன் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் நேர்காணலுக்கு பேச்சாளர்கள் உள்ளனர்.

அமைப்பு பற்றி:

வரையறையற்ற பத்திரிகை சுதந்தரம் (Free Press Unlimited)  என்பது நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் அமைந்துள்ள ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும், இது மோதல் பகுதிகளில் உள்ள உள்ளூர் ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரமான செய்திகளையும் நம்பகமான தகவல்களையும் வழங்க உதவுகிறது. உள்ளூர் ஊடக நிபுணர்களை ஆதரிப்பதன் மூலம், வரையறையற்ற பத்திரிகை சுதந்தரம் (FRU) ஒரு நிலையான, தொழில்முறை மற்றும் மாறுபட்ட ஊடக நிலப்பரப்பை செயல்படுத்துவதை ஆதரிக்க முயல்கிறது.

பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு (Committee to Protect Journalists):

பத்திரிக்கையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு என்பது ஒரு சுயாதீன இலாப நோக்கமற்ற அமைப்பாகும், இது பத்திரிகை சுதந்திரத்தை உலகளாவிய ரீதியில் ஊக்குவிக்கிறது மற்றும் பத்திரிக்கையாளர்களின் செய்தியை பாதுகாப்பாகவும், பயமின்றி அறிக்கையிடும் உரிமையையும்  பாதுகாக்கிறது.

எல்லைகள் இல்லாத நிருபர்கள் (Reporters Without Boarders): எல்லைகள்  இல்லாத நிருபர்கள்  என்பது ஃ பிரான்சின் பாரிஸில் அமைந்துள்ள ஒரு அரசு சாரா அமைப்பாகும். பிரஸ்ஸல்ஸ், டகார், வாஷிங்டன், பெர்லின், துானிஸ், ரியோ டி ஜெனிரோ, தைபே மற்றும் ஸ்டாக்ஹோம் உட்பட பத்து நகரங்களில் அதன் வெளிநாட்டுப் பிரிவுகள் உள்ளது. 130 நாடுகளில் அதன் நிருபர்களின் வலைதொடர்பானது, எல்லைகள் இல்லாத நிருபர்கள் நிறுவனத்திற்கு  ஆதரவை திரட்டுவதற்கான திறனை வழங்குகிறது, அதாவது அரசாங்கங்களை சவால் செய்தல், அமைச்சகங்கள், வரையறுக்கப்பட்ட ஊடகங்கள், இணையத்தள தரங்கள் மற்றும் சட்டம் வரைவு செய்யப்படும் வளாகங்கள் ஆகியவைகளுக்கு தமது செல்வாக்கை பிரயோகிக்க ஆவனசெய்கிறது..