Kashmiri journalists hold placards and protest against 100 days of internet blockade in the region in Srinagar, Indian controlled Kashmir, Tuesday, Nov. 12, 2019. Internet services have been cut since Aug. 5 when Indian-controlled Kashmir's semi-autonomous status was removed. (AP Photo/Mukhtar Khan)

இணைய முடக்கங்களின் போது: டிஜிட்டல் பாதுகாப்பு 

இணைய முடக்கங்கள் பத்திரிகைச் சுதந்திரத்தில் பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்துவதையும் அவை ஊடகவியலாளர்கள் தமது பணியை வினைத்திறனுடன் செய்வதை போராட்டம் மிக்க விடயமாக மாற்றுவதையும் CPJ கண்டறிந்துள்ளது. இணையத்தை செயலிழக்க செய்வது அல்லது அதன் மீதான அணுகலை மட்டுப்படுத்தல் காரணமாக ஊடகப் பணியாளர்கள் தமது மூலங்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை, மற்றும் தரவுகளின் யதார்த்த நிலையை சோதனை செய்தல் போன்ற விடயங்களை மேற்கொள்ள முடியாமல் போவதுடன் நிகழ்வு ஒன்று நிகழ்ந்த பின்னர் கூட கதைகளை அறிக்கையிட முடியாமல் போகின்றது. Access Now என்ற அமைப்பின் சர்வதேச கண்காணிப்பாளர்களின் கூற்றுகளுக்கு ஏற்ப, முரண்பாட்டு சூழ்நிலைகள், அரசியல் நெருக்கடிகள் அல்லது தேர்தல் காலம் போன்ற சந்தர்ப்பங்களில் தகவல்களுக்கான மக்களின் அணுகலை மட்டுப்படுத்தும் நோக்கில் இணைய முடக்கங்கள் அரசாங்கங்களினால் ஏற்படுத்தப்படும் சாத்தியம் அதிகமாகக் காணப்படுகின்றது. 

இணைய முடக்கங்களின் பல்வேறுபட்ட வகைகள் காணப்படுவதுடன் அவை நாடு முழுவதும் அல்லது நாடு ஒன்றின் குறிப்பிட்ட பிராந்தியங்களில் ஏற்படுத்தப்படலாம். முழுமையான இணைய மற்றும் தகவல் தொடர்பு சீர்குலைவு ஒன்றை எதிர்கொள்ளும் ஊடகவியலாளர்கள் அதன் பொழுது இணையத்தை அணுகவோ அல்லது ஏனையோரை செல்லிடப் பேசி அல்லது நிலையான தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்படுகின்றது. தொடர்பாடல் செயலிகள் அல்லது YouTube  போன்ற குறிப்பிட்ட தளங்களை மட்டுப்படுத்துமாறு அரசாங்கங்கள் இணைய சேவை வழங்குனர்களுக்கு பணிப்புரைகளை விடுக்க முடியம். குறிப்பாக பகுதியளவிலான முடக்கத்தின் போது ஊடக பணியாளர்கள் ஏனையோருடன் தொடர்பாட கொண்டுள்ள இயலுமை அல்லது தமது உள்ளடக்கங்களை இணையத்துக்கு பதிவேற்றம் செய்யும் இயலுமை என்பனவும் கட்டுப்படுத்தப்படலாம். 

அனைத்து வகை இணைய முடக்கங்களையும் கையாள்வதில் தயாராக இருத்தல் முக்கிய விடயமாக அமைகின்றது. இணைய முடக்கங்கள் பற்றிய கரிசனை கொண்ட ஊடகவியலாளர்களுக்கு பின்வரும் தகவல்கள் பயன் மிக்கனவாக இருக்க முடியும்.

டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பான சிறப்பான நடைமுறைகள் 

முடக்கம் ஒன்றுக்கு முன்னர் டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பான சிறப்பான நடைமுறைகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் இணைய முடக்கம் ஒன்றின் போது நீங்கள் அறிக்கையிடலை மேற்கொள்வதற்கு சிறப்பாக தயார் நிலையில் இருப்பதற்கும் சிறந்த பாதுகாப்பை பெற்றுக்கொள்வதற்கும் வழிவகுக்கும். 

  • உங்களின் கருவியை பாதுகாப்பானதாக ஆக்குவது மற்றும் அதில் காணப்படும் தகவல்களின அளவை மட்டுப்படுத்துவது என்பன நீங்கள் அல்லது உங்களின் மூலம் இணைய முடக்கம் ஒன்றின் போது அறிக்கையிடலை மேற்கொள்ளும் நிலையில் தடுத்து வைக்கப்படும் வேளை சிறந்த பாதுகாப்பைப் பெற உதவும். 
  • மற்றவர்களை தொடர்பு கொள்ள முனைக்கு முனை Encryption மேற்கொள்ளும் செய்தி பரிமாற்ற செயலிகளை பயன்படுத்துங்கள். முனைக்கு முனை Encrypt செய்யப்பட்ட செயலிகள் ஊடாக அனுப்பப்படும் உள்ளடக்கங்கள், தொலைபேசி அழைப்புகள் உள்ளடங்கலாக, அவற்றின் பரிமாற்றத்தின் போது ஒட்டுக்கேட்கப்பட முடியாதனவாகும். உதாரணமாக, Signal மற்றும் WhatsApp போன்ற செயலிகளின் கம்பனிகள் அனுப்பப்படும் உள்ளடக்கங்கள் மீதான அணுகல் அற்றனவாகும். எனவே அரசாங்கங்கள் இவற்றிடம் தகவல்களை ஒப்படைக்குமாறு பணிப்புரை வழங்க முடியாது. 

CPJ இன் டிஜிட்டல் பாதுகாப்பு தொகுதியில் டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் Encryption செய்யப்பட்ட தொடர்பாடல் பற்றி மேலும் கற்றுக்கொள்ளுங்கள். 

இணைய முடக்கங்களை எதிர்கொள்ள தயாராகுதல் 

  • இணையம் அல்லது தொடர்பாடல் முடக்கங்கள் எப்போது நிகழும் என்பதை எதிர்வு கூறுங்கள். அவை நிகழும் சாத்தியமான சந்தர்ப்பங்களில் சிவில் அமைதியின்மை, ஆர்ப்பாட்டங்கள் மற்றும் தேர்தல் காலங்கள் என்பனவும் உள்ளடங்குகின்றன. உங்கள் நாட்டில் உள்ள சில பிராந்தியங்கள் ஏனையவற்றை விட முடக்கம் அமுல்படுத்தப்படும் சாத்தியம் அதிகம் கொண்டனவாக காணப்படுகின்றன. 
  • அரசாங்கங்கள் இணையங்கள் மற்றும் ஏனைய தொலைத்தொடர்பு வடிவங்களை துண்டிப்பதை அனுமதிக்க சட்டவாக்கங்களில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களை அவதானித்து வாருங்கள். சுற்றயல் பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் அரசாங்கங்கள் இணையம் மற்றும் தொலைத்தொடர்பு முடக்கங்கள் தொடர்பில் என்ன செய்கின்றன என்பது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளுங்கள். 
  • முழுமையான முடக்கத்துக்கு தயாராக இருக்கும் வகையில் திட்டம் ஒன்றை தயாரித்தல் தொடர்பில் உங்களின் செய்தி அறை மற்றும் சக பணியாளர்களுடன் பேசுங்கள். எப்பொழுது எங்கு நேரடியாக சந்திப்பது, இணையத்தை பயன்படுத்தாமல் எவ்வாறு தகவல்களை மற்றும் ஆவணங்களை மட்டறுப்பாளர்களுடன் பகிர்ந்து கொள்வது போன்ற விபரங்கள் உள்ளடங்கிய திட்டம் ஒன்றை தயாரியுங்கள். நிலையான தொலைபேசி தொடர்பு விபரங்களை பகிர்ந்து கொள்வதை பரிசீலியுங்கள், எனினும், நிலையான தொலைபேசி உரையாடல்கள் பாதுகாப்பற்றன என்பதையும் கூருணர்திறன் மிக்க உரையாடல்களை மேற்கொள்ள அவை பயன்படுத்தப்படக் கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். இணைய முடக்கம் இடம்பெற அதிகம் சாத்தியம் மிக்க பிரதேசம் ஒன்றில் வாழும் மற்றும் பணிபுரியும் சகபாடிகளுக்கு எவ்வாறு நீங்கள் உதவலாம் என்பதைத் திட்டமிடுங்கள்.  
  • முடக்கத்தின் போது அவசியப்படலாம் எனக் கருதும் உள்ளடக்கங்கள் உள்ள இணையப் பக்கங்களில் இருந்து அவசியமான விடயங்களை முன்னரே அச்சிட்டு வைத்துக் கொள்ளுங்கள். 
  • முடக்கத்தின் போது தரவு சேமிப்புக்காக CD கள் அல்லது USB Drives களை பணியாளர்களுக்கு வழங்குங்கள்.

சரியான கருவிகளை தெரிவு செய்யயுங்கள்

இணையக் கருவிகள் பாதுகாப்பு மீறல்களுக்கு உட்படக் கூடியன. விசேடமாக, குறுந்தகவல் அனுப்பும் செயலிகள் போன்ற தொடர்பாடல் கருவிகள் பற்றிய அண்மித்த டிஜிட்டல் பாதுகாப்பு தகவல்களை அறிந்து வைத்திருங்கள். பின்வரும் அறிவுரை 2021 ஏப்ரல் மாதம் பெறப்பட்டனவாகும். 

  • பகுதியளவிலான முடக்கத்தின் போது தடுக்கப்பட்ட இணையத்தளங்களை அணுக உதவும் வகையில் VPN சேவைகளை தரவிறக்கம் செய்து செயற்படுத்திக் கொள்ளுங்கள். இணையச் சேவை வழங்குனர்கள் அடிக்கடி VPN சேவைகளை தடை செய்வர், எனவே கிடைக்கும் பல தெரிவுகளைக் கொண்டிருப்பது பரிந்துரை செய்யப்படுகின்றது. சில நாடுகளில் VPN களை பயன்படுத்துவது சட்டத்துக்கு புறம்பானதாக ஆக்கப்பட்டிருக்கும், எனவே உங்கள் நாட்டுச் சட்டத்தினை அறிந்திருங்கள். முழுமையான இணைய முடக்கத்தின் போது VPN பயனளிக்காது. 
  • பிறரை தொடர்பு கொள்ள ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளைக் கொண்டிருக்கவும். பல தொடர்பாடல் செயலிகளை தரவிறக்கம் செய்து அவற்றை செயற்படுத்தி வைத்திருப்பதன் மூலம் ஒரு செயலி முடக்கப்படும் வேளை ஏனையவற்றை பயன்படுத்த முடியும். வேறுபட்ட செயலிகள் கொண்டுள்ள பாதுகாப்பு குறைபாடுகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள். உதாரணமாக, சில சேவைகளில் Encryption வழமையான செயற்பாடாக அன்றி விருப்பத் தெரிவாக அமைந்திருக்கும், அதனை நீங்கள் செயற்படுத்த வேண்டியிருக்கும். முடக்கத்தின் போது நீங்கள் SMS போன்ற பாதுகாப்பற்ற வழிகளை தொடர்பாடலுக்கு பயன்படுத்தும் நிர்ப்பந்தம் ஏற்படும், எனவே எவ்வாறு நீங்கள் கூருணர்திறன் மிக்க தரவுகளை பகிர்வது என்பதில் கவனமாக நடக்க வேண்டும். Bluetooth, WiFi Direct மற்றும் Near Field Communication (NFC) போன்ற வசதிகளை பயன்படுத்தி எவ்வாறு தரவுகளை பகிர்வது எனக் கற்றுக்கொள்ளுங்கள். இவற்றின் மூலமாக உங்கள் கைப்பேசியை அருகில் உள்ள இன்னொரு கைப்பேசியுடன் இணைத்து தரவுகளை பரிமாற்ற முடியும், இதனை மேற்கொள்ள இணையம் அவசியமில்லை. இணைய முடக்கம் ஏற்படுத்தப்பட முன்னரே இவற்றை பயன்படுத்தி பரிச்சயமாவது கோப்புகளை பகிர்வதில் இவை கொண்டுள்ள மட்டுப்பாடுகளை புரிந்து கொள்ள உதவும். இவை சாதாரணமாக உங்களின் கைப்பேசியின் Settings இல் காணப்படும்.
  • சகபாடிகளுக்கு இடையான குறுந்தகவல் அனுப்பும் Briar அல்லது Bridgify போன்ற செயலிகளை தரவிறக்கம் செய்து செயற்படுத்திக் கொள்ளுங்கள். Briar  முனைக்கு முனை Encryption கொண்ட தொடர்பாடல் செயலியாக உள்ளதுடன் அதன் பயன்பாட்டுக்கு இணையம், WiFi Direct மற்றும் Bluetooth என்பன அவசியம். Briar ஐ விட Bridgify குறைவான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டது, எனினும் அது நீண்ட தூரத்தினை இணைக்கும்.
  •  Roaming வசதி கொண்ட கைப்பேசி அல்லது செயற்கைக் கோள் கைப்பேசியில் சர்வதேச சிம் அட்டை ஒன்றைக் கொண்டிருப்பது இணைய சேவையை முடக்கத்தின் போதும் பெற உதவும். எனினும், விசேடமாக Location Tracking தொடர்பில்,  இவ்வகை கருவிகளை பயன்படுத்துவதுடன் இணைந்துள்ள பாதுகாப்பு அபாயங்களை அறிந்து வைத்திருங்கள். இவை நீங்கள் உள்ள நாட்டில் சட்டபூர்வமானவையா என அறிந்து கொள்ளுங்கள். 

இணைய முடக்கம் ஒன்றின் போது

  • சூழ்நிலைக்கு ஏற்ப, இணைய முடக்கம் ஒன்றின் போது அறிக்கையிடலை மேற்கொள்வது நீங்கள் தடுத்து வைக்கப்படும் சாத்தியத்தை மேலும் அதிகரிக்கும். உங்களை மற்றும் ஏனையோரை அபாயத்தில் சிக்க வைக்க வல்ல கூருணர்திறன் மிக்க தகவல்கள் உங்கள் கருவிகள் கொண்டிருக்காத நிலையை உறுதிப்படுத்துங்கள். 
  • விடயங்களை அவை நிகழும் நேரம் உங்களால் அறிக்கையிட போனாலும், என்ன நிகழ்கின்றது என்பதை உங்களால் ஆவணப்படுத்த முடியும். தரவுகளை சேகரிக்க CD கள் அல்லது USB களை பயன்படுத்துங்கள், சாத்தியமாயின் அவற்றை Encryption செய்து கொள்ளுங்கள் அத்துடன் அவற்றை உங்கள் சகபாடிகள் மற்றும் மட்டறுப்பாளர்களுக்கு கையளியுங்கள். கருவிகளில் உள்ள தகவல்கள் Encryption செய்யப்படாவிட்டால் நீங்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் வேளை அவற்றை அதிகார தரப்பினரால் அணுக முடியும் என்பதை அறிந்து வைத்திருங்கள். Bluetooth, WiFi Direct அல்லது NFC வசதிகளை (இவை கருவியின் Settings இல் வழமையாகக் காணப்படும்) பயன்படுத்தி கோப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களின் கருவிகள் சுற்றயலில் உள்ள ஏதாவது அறியப்படாத கருவிகளுடன் இணைக்கப்படும் முன்னர் இவ்வசதிகளின் பயன்பாடு நிறைவுற்ற பின்னர் அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதையும் இவ்வகையான தரவுப் பரிமாற்றங்கள் பாதுகாப்பற்றன என்பதையும் அறிந்திருக்கவும். 
  • சகபாடிகளுக்கு இடையான தொடர்பாடல் செயலிகளான Briar மற்றும் Bridgify  போன்றவற்றை பயன்படுத்தவும். இச்செயலிகள் ஒவ்வொன்றுடனும் இணைந்துள்ள பாதுகாப்பு அபாயங்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள். 
  • இணைய முடக்கங்களின் போது SMS, தொலைபேசி அழைப்புகள் போன்ற பாதுகாப்பற்ற தொடர்பாடல் முறைகளை கூருணர்திறன் மிக்க தகவல்களைப் பகிரப் பயன்படுத்துவதை தவிர்க்க முயற்சி செய்யவும். உதாரணமாக, உங்களின் தொடர்பாடல் சேவை வழங்குனர் ஊடாக இவ்வாறான தொடர்பாடல் நடவடிக்கைகளை அரசாங்கங்களால் ஒட்டுக் கேட்க முடியும்.  
  • செயலிகளை இணைய இணைப்பின்றி தரவிறக்கம் செய்ய அன்ரொய்ட் கைப்பேசி பாவனையாளர்கள் F–Droid வசதியை பயன்படுத்த முடியும். APK கோப்பினை பயன்படுத்தி அன்ட்ரொய்ட் ரக கருவிகளில் செயலிகளை பதிந்து கொள்வது இன்னொரு முறையாக அமைந்துள்ளது. இந்த செயலிகள் மூலம் கோப்புகள் App Store ஒன்றுடன் இணைக்கப்படாமலேயே இன்னொரு கருவியுடன் பகிரப்படலாம், எனினும் இவை App Store இன் சரிபார்ப்புக்கு உட்படுத்தப்படுவதில்லை, எனவே உங்களின் நம்பிக்கைக்கு உரிய நபர்களிடம் இருந்து மாத்திரமே கோப்புகளை இவற்றின் ஊடாக பெறவும். 
  • தடுக்கப்பட்ட இணையத்தளங்களின் screen shot களை எடுப்பதன் மூலம் இணைய முடக்கத்தை ஆவணப்படுத்துங்கள். பின்னர் இத்தகவல்களை உங்கள் நாட்டில் இயங்கும் அல்லது சர்வதேச ரீதியாக இயங்கும் டிஜிட்டல் உரிமை செயற்பாட்டு நிறுவனம் ஒன்றுடன் பகிர்ந்து கொள்ளலாம். அவ்வாறு செய்வது உங்களை அபாயத்தில் தள்ளலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

இணைய முடக்கம் ஒன்றின் பின்னர்

  • இணைய முடக்கம் ஒன்றுக்காக தயாராகும் வேளை எதனை சிறப்பாக இயங்கியது மற்றும் எது சிறப்பாக இயங்கவில்லை என்பதை உங்களது செய்தியறை சகபாடிகளுடன் பேசுங்கள். 
  • உங்களின் கருவிகளை மீளாய்வு செய்யுங்கள், அதனை Back up செய்து உள்ளடக்கங்களை அகற்றுங்கள், அவ்வுள்ளடக்கங்களை ஒரு வெளியக சேமிப்பகம் அல்லது இணைய சேமிப்பகத்தில் சேமியுங்கள். சாத்தியமாயின், உங்களின் தரவுகளை மேலும் பாதுகாப்பானதாக ஆக்க அவற்றை Encrypt  செய்யுங்கள்.

ஏனைய வளங்கள்