Mohammad Naweed, a journalist from western Afghanistan, hides his identity for security reasons as he gives an interview to The Associated Press in Kabul, Afghanistan, Feb. 3, 2021. In just the last six months, 15 journalists have been killed in a series of targeted killings spreading fear among Afghanistan’s journalist community. Along with journalists, Judges, lawyers and activists have also been targeted in a wave of assassinations since Washington signed a peace deal with the Taliban a year ago. (AP Photo/Rahmat Gul) (AP Photo/Rahmat Gul)

டிஜிட்டல் மற்றும் பௌதீக பாதுகாப்பு: இரகசிய மூலங்களை பாதுகாத்தல்.

இரகசிய மூலங்களைப் பாதுகாத்தல் என்பது ஒழுக்க நெறிமுறை மிக்க அறிக்கையிடலின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகவுள்ளது. ஊடகவியலாளர்கள் ஒருவரின் அடையாளத்தை பாதுகாக்க இணங்கும் பட்சத்தில், அவர்கள் அதனை நிறைவேற்றுவதற்கு அவசியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். விசேடமாக, மூலம் ஒன்று கைது செய்யப்பட அல்லது தீங்கை எதிர்நோக்க சாத்தியம் மிக்க சூழ்நிலைகளில் இதனை அவசியம் மேற்கொள்ள வேண்டும். 

அதிகார தரப்பினர் மற்றும் பொதுமக்கள் மேற்கொள்ளும் கண்காணிப்பு மற்றும் அதிகரித்து வரும் டிஜிட்டல் உளவு பாரத்ததல் செயற்பாடுகள் என்பவற்றின் காரணமாக இரகசியத்தன்மையை பாதுகாத்தல் என்பது அதிக சவால் மிக்க விடயமாக மாறி வருகின்றது. எனவே, இரகசிய மூலங்களின் அடையாளத்தை பாதுகாப்பதற்கு உதவி பெறும் வகையில் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு அறிவுரைகளைப் பின்பற்றுவதை கருத்திற் கொள்ள வேண்டும். 

எவ்வாறாயினும், ஊடகவியலாளர்கள் தமது மூலத்தின் அடையாளத்தை மட்டறுப்பாளர்களுடன் (Editors) பகிர வேண்டும் என்ற கொள்கை ஒன்றை ஊடக நிறுவனங்கள் கொண்டிருக்கலாம் என்பதை அறிந்திருக்க வேண்டும். சில நாடுகளில், ஊடகவியலாளர்களின் குறிப்பு புத்தகங்கள் அல்லது அவர்களின் கருவிகளை அவ்வூடகவியலாளர்கள் பணி புரியும் நிறுவனங்கள் தேவையேற்படின் நீதிமன்றம் ஒன்றுக்கு அல்லது அதிகார தரப்புகளுக்கு வழங்கும் கடப்பாடு மிக்கனவாக காணப்படலாம். எந்தவொரு வாக்குறுதியையும் மூலங்களுக்கு வழங்கும் முன்னர் அவ்வாறான விதிகள் தொடர்பான ஆய்வுகளை ஊடகவியலாளர்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இக்குறிப்புஉலகளாவியஊடகவியலாளர்களுக்குபொதுவானஅறிமுகம்ஒன்றைவழங்கும்நோக்கில்எழுதப்பட்டதுஎன்பதைதயவுசெய்துகவனத்தில்கொள்ளவும்.ஒவ்வொருநாட்டுக்கும்தனித்துவம்மிக்கசூழமைவுகள்மற்றும்கேள்விகள்தொடர்பில்மேலதிகஅறிவுரைகளைதேடிப்பெற்றுக்கொள்ளவும். 

உள்ளடக்கம்

திட்டமிடல்

முதன்முறையாக இரகசிய மூலங்களுடன் இடையீடுகளை மேற்கொள்வது மிகவும் முக்கியமானது. ஏனெனில் அது தொடர்ச்சியான ஒத்துழைப்பு, பாதுகாப்பான தொடர்பாடல் மற்றும் நம்பிக்கை என்பவற்றுடன் தொடர்புடையதாகும்.  

  • ஒரு மூலம் தான் பெயரிடப்படுவதை விரும்பும் என ஒரு போதும் முன்னனுமானம் மேற்கொள்ள வேண்டாம். எப்போதும் அவர்களின் ஒப்புதலை பெற்றுக்கொள்ளுங்கள். 
  • இரகசிய மூலங்களுடன் பணி புரிவது தொடர்பில் ஏதாவது சட்ட ரீதியான கடப்பாடுகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து கொள்ளுங்கள். இது நாட்டுக்கு நாடு மற்றும் பணி வழங்குநருக்கு ஏற்ப மாறுபடும் தன்மை கொண்டது. 
  • மூலம் முன்னதாக ஏனைய ஊடகவியலாளர்களுடன் உரையாடலில் ஈடுபட்டுள்ளதா என்பதை அல்லது ஏனைய நிறுவனங்கள் அம்மூலத்தை தொடர்பு கொள்ள முயற்சித்தனவா என அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். 
  • மூலம் கண்காணிக்கப்படும் அபாயம் ஒன்று உள்ளதா, அல்லது அம்மூலம் ஏற்கனவே மறைந்து வாழ்கின்றதா? அம்மூலம் அதிகார சபைகளின் அல்லது தாக்குதல் தொடுக்கும் வல்லமை மிக்க செயற்பாட்டாளர்களின் பார்வைக்குள் உள்ளதா என்பன போன்ற விடயங்கள் கவனிக்கப்பட வேண்டும். இவ்வாறானவர்களுடன் இடையீடுகளை மேற்கொள்வது உங்களுக்கு அபாயத்தைக் கொண்டு வரலாம். 
  • இவ்விடயங்களை சரி பார்ப்பதற்கு அசாதாரண சொற்றொடர் அல்லது கேள்வி பதில் போன்ற வசதியான முறைமை ஒன்றை உருவாக்குங்கள். அம்முறைமையை நீங்கள் மூலத்துடன் உரையாடும் ஒவ்வொரு தடவையும் பிரயோகியுங்கள். 
  • காணப்படும் அபாயத்தின் அளவுக்கு ஏற்ப, பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களை தற்காலிகமாக இடம் மாற்றுவதற்கு பொருத்தமான இடமொன்றினையும் அடையாளம் காணும் தேவை உங்களுக்கு ஏற்படலாம்.
அபாயத்தைமதிப்பிடலும்வெகுமதியும்

கதையின் கூருணர்திறன் மற்றும் மூலம் வழங்கும் தகவல்கள் அத்துடன் மூலத்தின் அடையாளம் என்பவற்றை எப்போதும் கருத்திற் கொள்ளுங்கள். 

  • மூலம் மற்றும் நீங்கள் ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் இடையீடுகளை மேற்கொள்ளும் வேளை அபாயம் ஏற்படும் சாத்தியம் குறிப்பிடத்தக்க அளவு காணப்படுகின்றதா? திருடப்பட்ட அல்லது இரகசியம் என வகைப்படுத்தப்பட்ட தகவல்களை பயன்படுத்தல் உங்களுக்கும் உங்களின் செய்தி நிறுவனத்துக்கும் தீவிரமான பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். 
  • அவர்கள் வழங்கும் தகவல்கள் எந்தளவு பயன்மிக்கது அல்லது நம்பகத்தன்மை வாய்ந்தது? அவர்கள் தகவல்களை வழங்குவதற்கான நோக்கம் என்னவாக இருக்கும் என்பதையும் அவர்கள் உங்களுக்கு அல்லது உங்கள் நிறுவனத்துக்கு அபாயத்தை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளவர்களா என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். 
  • இனம், பால்நிலை, தோற்ற வடிவம், பால், மதம் மற்றும் குற்றப் பதிவுகள் போன்ற காரணிகள் உள்ளடங்கலாக அவர்களின் அடையாளத்தை கருத்திற் கொள்ளுங்கள். அவர்களின் அடையாளம் வெளிப்படுத்தப்பட்டு விட்டால் அவ்வாறான காரணிகள் உங்களின் கதையை செல்லுபடியற்றதாக ஆக்குவதற்கு பயன்படுத்தப்படுமா, அல்லது அக்காரணிகள் அவர்களுக்கு ஏற்படும் தீங்கை அதிகரிக்க அல்லது கைது செய்யப்படும் சாத்தியத்தை அதிகரிக்குமா?
டிஜிட்டல்பாதுகாப்புடன்இணைந்தசிறந்தநடைமுறைகள் 

தரவுகளை அணுகுவதற்கு அரசாங்கத்தின் கட்டளைகள், கருவிகள் மீதான பௌதீக அணுகல், கணணித் தாக்குதல் (Hacking) உளவு மென்பொருள் உள்ளடங்கலாக பல வழிகள் காணப்படுகின்றன. மூலம் ஒன்றின் அடையாளத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பதில் உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்பட்டால் ஒரு டிஜிட்டல் பாதுகாப்பு நிபுணரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளுங்கள். 

  • டிஜிட்டல் பாதுகாப்பை பொறுத்த வரை சிறந்த நடைமுறைகளைப் பயன்படுத்துவதுடன் உங்களின் மூலத்தை முடிந்தளவு பாதுகாப்பாக வைத்திருக்க அவசியமான கருவிகள் மற்றும் சேவைகள் பற்றி பரிச்சியமடையுங்கள். 
  • டிஜிட்டல் அபாய நேரிடர் மதிப்பீடு (Risk Assessment ) ஒன்றை மேற்கொள்ளுங்கள். இது உங்களுக்கும் உங்களின் மூலங்களுக்கும் ஏற்பட சாத்தியமான அபாயங்களை மதிப்பிட மற்றும் சாத்தியமான சந்தர்ப்பங்களில் அவற்றை அகற்றவும் உங்களுக்கு உதவும். ஊடகவியலாளர்களுக்கான விபரமான டிஜிட்டல் அபாயநேரிடர் மதிப்பீட்டு வடிவம் ஒன்றை Rory Peck Trust அமைப்பு கொண்டுள்ளது. 
  • உங்களை மற்றும் உங்கள் மூலங்கள் எவரால் இலக்கு வைக்கப்படும் எனவும் அந்த நபர் அல்லது தரப்பு கொண்டுள்ள அதிகாரம், பண பலம், மற்றும் தொழில்நுட்ப இயலுமை என்பன பற்றி சிந்தனை செய்யுங்கள். 
  • சாத்தியமாயின், உங்களின் தனிப்பட்ட அல்லது பணி நிமித்தம் வழங்கப்பட்ட கருவிகளை கூருணர்திறன் மிக்க மூலங்களைத் தொடர்பு கொள்ள பயன்படுத்த வேண்டாம். அவர்களுடன் தொடர்பாடுவதற்கென்றே கருவிகளை கொள்வனவு செய்வதுடன் உங்களின் பணி மற்றும் தனிப்பட்ட தரவுகளை வேறு வேறாக பேணிக் கொள்ளுங்கள். இயலுமாயின், அவ்வாறான தொடர்பாடல் கருவிகள் மற்றும் சிம் அட்டைக் கொள்வனவுகளை உங்களை அடையாளப்படுத்த இயலுமான கிரடிட் அல்லது டெபிட் அட்டைகளைப் பயன்படுத்தி கொள்வனவு செய்யாமல் பணம் செலுத்துவதன் மூலம் அக்கொள்வனவுகளை மேற்கொள்ளுங்கள். (நீங்கள் எங்கே வாழ்கின்றீர்கள் மற்றும் பணி புரிகின்றீர்கள் என்பதைப் பொறுத்து இவ்விடயம் எல்லா நிலைகளிலும் சாத்தியமானதாக அமையாது. 
  • அனைத்து பயனர் கணக்குகளுக்கும் இரட்டை அடுக்கு உறுதி செய்தல் வசதிகளை பயன்படுத்துவதுடன் நீண்ட, தனித்துவம் மிக்க கடவுச் சொற்களை பயன்படுத்துவதுடன் கடவுச் சொல் முகாமை (Password Manager) வசதியையும் பயன்படுத்துங்கள். மேலதிக தகவல்களுக்கு பயனர் கணக்குகளை பாதுகாப்பதற்கான CPJ வழிகாட்டியை நோக்குங்கள்.
  • உங்களின் கருவிகள், செயலிகள் மற்றும் இணைய உலாவிகளை (Browsers) புதுப்பித்தல் செய்வதுடன் அவற்றின் இறுதி வெளியீடுகளை பயன்படுத்துவதை உறுதி செய்யுங்கள். இதன் மூலமாக உளவு மென்பொருள் மற்றும் தீங்கு மென்பொருள் என்பவற்றில் இருந்து சிறந்த பாதுகாப்பை பெறலாம்.  
  • இதிலுள்ள அபாயங்கள் மற்றும் சிறந்த டிஜிட்டல் நடைமுறைகளை மூலங்கள் அறிந்திருப்பதை உறுதி செய்யுங்கள். இதன் மூலமாக அவர்கள் சாத்தியமான ஆகக் கூடிய பாதுகாப்பான வழியில் உங்களை தொடர்பு கொள்ளலாம். 
  • மூலத்துடனான உங்களின் தொடர்பை முடிந்தளவு மட்டுப்படுத்துங்கள்.
உங்களின்மூலத்தைஆய்வுசெய்தல்
  • நீங்கள் உலவிய இணையப் பக்கங்களின் வரலாற்று விபரங்களின் பிரதி ஒன்றை உங்கள் இணையச் சேவை வழங்குனர் வைத்துக்கொள்வதுடன் அதனை அரசாங்க ஆணை ஒன்றின் மூலம் வெளிக்கொண்டு வரலாம் அல்லது அச்சேவை வழங்கும் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு அது அணுகல் மிக்கது என்பதனை அறிந்திருங்கள். 
  • உங்கள் நாட்டில் செயற்படும் இணையச் சேவை வழங்குனரின் உரிமையாளர் யார் என்பதையும் பயனர் தரவுகளின் மீதான அணுகலை அரசாங்கம் சட்ட ரீதியாக அல்லது வேறு வழிகளில் கொண்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்யுங்கள். 
  • உங்களின் இணையச் சேவை வழங்குனர் அல்லது தேடு பொறிகளால் உங்களின் இணைய உலாவல் வரலாறு என்பன பதிவு செய்யப்படுவதில் இருந்து பாதுகாக்கப்பட VPN ஒன்றைப் பயன்படுத்தவூம். உங்களின் இணைய உலாவல் வரலாற்றை பதிவு செய்யாத மற்றும் அரசாங்கம் அத்துடன் ஏனையோருடன் தரவுகளை பகிர்ந்த வரலாறு அற்ற VPN சேவை ஒன்றைப் பயன்படுத்துங்கள். அரசாங்கங்கள் VPN கம்பனிகளை உருவாக்கலாம் அல்லது அனுமதி பெற்ற VPN கம்பனிகளை முகாமை செய்யலாம் அல்லது அவை பயனர் தரவுகளை பகிரும் கட்டாயத்தை உருவாக்கலாம். 
  • நீங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு உங்களின் கருவிகள் சோதனை செய்யப்படும் நிலையில் உங்களின் இணையத் தேடல் பற்றிய விபரங்களை உலாவல் வரலாறு வழங்கக் கூடியது என்பதை நினைவில் கொண்டிருங்கள். உங்களின் இணைய உலாவல் வரலாற்றை தொடர்ச்சியாக அகற்றி வரவும்,  எனினும், VPN சேவை அல்லது தேடல் பொறி இயக்குனர் போன்ற தொடர்புடைய கம்பனிகளிடம் அரசாங்கம் தேவையான தரவுகளுக்கான கோரிக்கையை விடுக்கும் இயலுமையை அரசாங்கம் கொண்டிருப்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மூலங்களுடன்தொடர்பாடல்
  • மூலம் ஒன்றின் பெயரை உங்களது தொடர்பு விபரங்களில் சேமிக்கும் வேளை உண்மையான பெயருக்கு பதிலாக புனை பெயர் ஒன்றை பயன்படுத்தும் அதே வேளை மூலம் உங்களின் தொடர்பினை சேமிக்கும் வேளை இதே முறையை பின்பற்றுமாறு அறிவுறுத்துங்கள். தொடர்புகள் முடிவுற்ற பின்னர் இரு தரப்பும் தமது கருவிகளில் மற்றும் இணைய பயனர் கணக்குகளில் பதிந்துள்ள தொடர்பு விபரங்களை அழித்து விட வேண்டும். 
  • செல்லிடப்பேசிக் கம்பனிகள் மற்றும் இணையச் சேவை வழங்குநர்கள் உங்களை மற்றும் உங்களின் தொடர்புகளை அடையாளம் காண மற்றும் இருப்பிடத்தை கண்டுபிடிக்க தேவையான தரவுகள் உள்ளடங்கலாக தமது பயனர்கள் பற்றிய தரவுகளை சேகரிக்கின்றன. 
  • செல்லிடப்பேசிகள் மற்றும் நிலையான தொலைத் தொடர்பு வசதிகள் ஊடாக அனுப்பப்படும் குறுந்தகவல்கள் (SMS) Encrypt  செய்யப்படுவதில்லை. எனவே அரசாங்கம் மற்றும் ஏனையோர் அக்குறுந்தகவலுக்கான அணுகலை கொண்டிருக்க முடியும். 
  • உங்களின் மற்றும் உங்களின் மூலத்தின் இருப்பிடத்தை அறிவு உங்களின் செல்லிடப்பேசி பயன்படுத்தப்பட முடியும். நேரடியான சந்திப்பு ஒன்றுக்கு செல்லும் வேளை இரு தரப்பும் தமது செல்லிடப் பேசிகளை கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். ஒருவரை இணையம் மூலம் தொடர்பு கொள்வதை விட நேரடியாக சந்திப்பது பாதுகாப்பானதாக அமையலாம். (“மூலங்களை சந்தித்தல்” என்ற கீழுள்ள பகுதியை நோக்கவும்.)
  • தகவல் பரிமாற்ற செயலி மற்றும் மின்னஞ்சல் வசதி வழங்குநர்கள் போன்ற நீங்கள் பயன்படுத்தும் எந்தவொரு இணையச் சேவைக்கும் தகவல் வழங்குமாறு அரசாங்கம் ஒன்று ஏற்கனவே பணிப்பாணை வழங்கியுள்ளதா என்பதை ஆராயவும். அநேகமான தொழில்நுட்ப கம்பனிகள் பயனர் தரவுகளை கோரி விண்ணப்பங்களை பெற்றனவா மற்றும் அவற்றுக்கு இணங்க தகவல்கள் வழங்கப்பட்டனவா என்பன போன்ற விபரங்களை குறிப்பிடும் வருடாந்த வெளிப்படைத்தன்மை அறிக்கைகளை வெளியிடுகின்றன. 
  • சாத்தியமான சந்தர்ப்பங்களில் உங்களின் மூலத்துடன் தொடர்பு கொள்ள Signal, WhatsApp அல்லது Wire  போன்ற முனைக்கு முனை Encryptipn மேற்கொள்ளும் தகவல் பரிமாற்ற செயலிகளை பயன்படுத்தவும். WhatsApp இனை பயன்படுத்தும் வேளை Disappearing Messages  என்ற வசதியை செயற்படுத்திக் கொள்ளுங்கள். பாதுகாப்பினை கருத்திற் கொள்ளும் வேளை இந்த சேவைகள் முக்கிய வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. மேலதிக விபரங்களுக்கு Encrypted Communication இற்கான CPJ இனது வழிகாட்டலை நோக்கவும். 
  • முனைக்கு முனை Encryption  வசதியற்ற சேவை ஒன்றின் ஊடாக மூலம் ஒன்று உங்களை தொடர்பு கொள்ளும் வேளை, முடிந்தளவு விரைவாக தொடர்பாடலை Encryption கொண்ட சேவை ஒன்றுக்கு மாற்றுங்கள். சாத்தியமாயின் முந்தைய தொடர்பாடலை அழிப்பதுடன் அதனை மூலமும் செய்வதற்கு ஊக்குவியுங்கள். இது அந்த பயனர் கணக்கில் காணப்பட்ட பிரதியை மாத்திரமே அழிக்கும் என்பதுடன் அந்த செயலியின் கம்பனியின் Server  இல் இன்னும் ஒரு பிரதி காணப்படும் சாத்தியம் உள்ளது. 
  • மூலத்தினை நீங்கள் மின்னஞ்சல் ஒன்றின் ஊடாக தொடர்பு கொள்ளும் தேவை காணப்படுமாயின் இந்நோக்கத்துக்காக மாத்திரம் தனியான மின்னஞ்சல் கணக்கு ஒன்றைத் தொடங்குங்கள். உங்களின் சொந்தப் பெயர் போன்ற எந்தவொரு தனிப்பட்ட தரவுகளும் அக்கணக்கில் காணப்படக் கூடாது என்பதுடன் அது உங்கள் பெயரில் உள்ள ஏனைய கணக்குகளுடனோ அல்லது உங்களின் செல்லிடப் பேசியுடனோ இணைக்கப்பட்டிருக்க கூடாது. Rory Peck Trust இன் டிஜிட்டல் பாதுகாப்பு வழிகாட்டியில் எவ்வாறு மின்னஞ்சல் கணக்கு ஒன்றை ஏற்படுத்துவது என்பது பற்றி மேலும் வாசிக்கவும்.
ஆவணங்கள்பெறுதல்மற்றும்முகாமைசெய்தல் 
  • உங்கள் கருவிகளில் நீங்கள் செய்யயும் கிட்டத்தட்ட அனைத்து விடயங்களும், அவை அழிக்கப்பட்ட பின்னரும் கூட கண்டுபிடிக்கப்படக் கூடியன என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்களின் கணணியின் தரவுகளை அழித்து அகற்ற நீங்கள் விசேடத்துவம் மிக்க மென்பொருளை பயன்படுத்தியிருந்தால் கூட தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களால் அவற்றை மீளப் பெற முடியும். 
  • கூருணர்திறன் மிக்க ஆவணங்களை இணையத்துடன் இணைக்கப்பட முடியாத வகையில் மாற்றம் செய்யப்பட்ட கணணி ஒன்றில் (Air-gripped Computer) வைத்துக்கொள்ளுங்கள். வெளிநபர் ஒருவர் அவற்றை அணுகும் சாத்தியத்தை இது குறைக்கும். 
  • மிகவும் கூருணர்திறன் கொண்ட கதைகளுக்கு, Tails என அறியப்படும் கொண்டு செல்ல முடியுமான Operating System முறைமையை பயன்படுத்துவதை கருத்திற் கொள்ளுங்கள். இதனை எந்தவொரு கணணியிலும் பயன்படுத்த முடியும். இதனை செயற்படுத்திக் கொள்வதற்கு பாதுகாப்பு நிபுணர் ஒருவரின் உதவியைப் பெறவும். 
  • கூருணர்திறன் மிக்க ஆவணங்களை அனுப்பவதற்கு TOR இணைய உலாவியின் ஊடாக SecureDrop என்ற வசதியை உங்கள் செய்தி நிறுவனம் ஏற்படுத்தியிருந்தால் அதனைப் பயன்படுத்தவும். இதற்கு டிஜிட்டல் பாதுகாப்பு நிபுணர் ஒருவரின் உதவி உங்களுக்கு தேவைப்படும். 
  • SecureDrop வசதி இல்லாத ஊடகவியலாளர்கள் 100 MB  அளவிலும் குறைவான ஆவணங்களை அனுப்புவதற்கு Signal Messenger  அல்லது முனைக்கு முனை குறியீடாக்க வசதி காணப்படும் தொடர்பாடல் செயலிகளை பயன்படுத்தலாம். 100 MB அளவுக்கும் அதிக அளவு கொண்ட ஆவணங்கள் OnionShare என்ற வசதி மூலம் அனுப்பப்படலாம். 
  • ஆவணங்களில், கோப்புகளில் மற்றும் தகவல் பரிமாற்ற செயலிகளில் உள்ள Metadata  (ஆவணம் ஒன்று அனுப்பபட்ட திகதி மற்றும் நேரம் போன்றன) அனைத்து சந்தர்ப்பங்களிலும் குறியீடாக்கத்துக்கு உட்படுத்தப்படுவதில்லை. எனவே இது உங்களின் மூலத்தை எவராவது ஒருவர் அடையாளம் காண வழிவகுக்கும்.
  • தகவல் அனுப்பும் செயலிகளில் உள்ள உள்ளடக்கங்களை Back up செய்த பின்னர் அவற்றை அழித்து விடுவதற்கான தொடர் செயன்முறை ஒன்றைக் கொண்டிருக்கவும். மூலங்களின் செயலிகள் மற்றும் கருவிகளில் காணப்படும் தரவுகளை எவ்வாறு முகாமைத்துவம் செய்வது என்பது தொடர்பில் அவர்களுடன் பேசவும். இந்த தரவுகளை எவ்வாறு சிறப்பாக முகாமைத்துவம் செய்வது என்பது தொடர்பில் டிஜிட்டல் பாதுகாப்பு வாண்மையாளர் ஒருவரிடம் ஆலோசனையை பெறவும். 
  • உங்களையும் ஏனையோரையும் அபாயத்தில் தள்ளி விடக் கூடிய ஆவணங்கள் மற்றும் தரவுகள் தொடர்பில் தொடர்ச்சியாக உங்களின் கருவிகளை மீளாய்வு செய்யுங்கள். பிரதேச எல்லைகளை அல்லது சோதனைச் சாவடிகளை கடக்கும் ஒரு நபர் நீங்களாயின், விசேடமாக இது மேற்கொள்ளப்பட வேண்டும்.  
  • உங்களின் கருவிகள், ஆவணங்கள்இ மற்றும் வெளிப்புற சேமிப்பகங்களை Encrypt செய்யுங்கள். மேலும் உங்களின் Encryption கடவுச் சொல் தனித்துவம் மிக்கதாகவும் நீண்டதாகவும் அமைவதை உறுதி செய்யுங்கள். Encryption தொடர்பில் நீங்கள் வாழும், பணிபுரியும் மற்றும் பிரயாணம் மேற்கொள்ளும் நாடுகளில் உள்ள சட்டங்களை அறிந்து வைத்திருங்கள். உங்களின் கருவிகளின் Encryption ஐ திறக்குமாறு உங்களிடம் கோரப்படலாம். அதை நீங்கள் செய்வதா இல்லையா என்பது தனிப்பட்ட தெரிவொன்றாக அமைந்திருக்காது.
மூலங்களைசந்தித்தல்
  • மூலங்களை நேரடியாக சந்தித்தல் மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் இயங்கு தளத்தை பயன்படுத்தல் ஆகிய இரண்டு வழிகளிலும் உள்ள அனுகூலங்கள் மற்றும் பிரதிகூலங்களை மதிப்பீடு செய்யுங்கள். 
  • இந்த சந்திப்புக்கு பொறுப்பாக உள்ளவர் யார் மற்றும் அந்நாளில் ஏதாவது திட்டங்களை மாற்றியமைக்க பொறுப்பான நபர் யார் என்பவற்றை தீர்மானியுங்கள். 
  • உங்கள் மூலத்தின் வீட்டு அல்லது பணித்தல் முகவரியுடன் இணைந்திருக்க முடியாத நடுநிலையான இடம் ஒன்றில் சந்திப்பை மேற்கொள்ளுங்கள். 
  • உளவு பார்க்கப்படுவதற்கான ஏதாவது குறிகாட்டிகள் காணப்படுகின்றதா என்பதை சந்திப்பின் போது கண்காணியுங்கள். தேவையேற்படின், எச்சரிக்கை சமிக்ஞையை வழங்குவதற்கு நம்பத்தகுந்த தொடர்பு ஒன்றை தயாராக வைத்துக்கொள்ளுங்கள். 
  • சந்திப்பின் போது பெறப்படும் கூருணர்திறன் மிக்க தகவல்களை உங்களின் பணித்தளத்துக்கு எவ்வாறு பாதுகாப்பாக கொண்டு செல்வது என்பதனை தீர்மானியுங்கள். விசேடமாக, தரவவுகளை கொண்டு செல்லும் முறை மூலத்தை அடையாளம் காண உதவலாம் எனும் நிலையில் இதனை தீவிரமாக கருத்திற்கொள்ள வேண்டும். 
  • போக்குவரத்துக்கு காணப்படும் தெரிவுகளை கருத்திற் கொள்ளுங்கள். CCTV  கமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் சாத்தியத்தை கவனியுங்கள்: 
  • பொதுப் போக்குவரத்து வசதியைப் பயன்படுத்தினால், வங்கி அட்டையை பயன்படுத்துவது நபர்களை அடையாளப்படுத்த உதவும் என்பதால் பயணச் சீட்டுக்கான கட்டணத்தை பணத்தை பயன்படுத்தி செலுத்துங்கள். ATM கண்காணிப்பு காணொளி சந்திப்பு நடந்த தினத்துடன் பொருத்திப் பார்க்கப்படும் வாய்ப்பை குறைப்பதற்கு சந்திப்பு இடம்பெறுவதற்கு குறைந்தது ஒரு தினத்துக்கு முன்னதாக அதில் இருந்து பணத்தை எடுங்கள். 
  • தனியார் வாகன இலக்கத் தகடுகள் கமராக்களால் கண்டு பிடிக்கப்படும் தன்மை கொண்டன. கண் பார்வைக்கு எட்டாத இடமொன்றில் உங்களின் வாகனத்தை பாதுகாப்பாக நிறுத்தி வையுங்கள். அத்துடன் எப்பபோதும் தப்பியோட பொருத்தமான திசை நோக்கியதாக வாகனத்தை நிறுத்தி வையுங்கள். 
  • நீங்கள் உளவுபார்ப்பதாக உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், சந்திப்பை முடிவுக்கு கொண்டு வரவும்.
மூலங்களின்பெயரகற்றல்

மூலத்தின் புகைப்படங்கள் அல்லது ஒலி / காணொளிப் பதிவுகளை எடுத்தால் பின்வரும் விடயங்களை கருத்திற்கொள்ளுங்கள். 

  • ஒலிகளுக்கு, நீங்கள் ரொபடிக் குரற்பதிவை பயன்படுத்துவீர்களா? அல்லது முற்று முழுதாக வேறொருவரின் குரலை பயன்படுத்துவீர்களா? 
  • அவர்களின் முகத்தை மறைத்துக் காண்பிப்பீர்களா? அல்லது அவர்களின் முகத்தை உள்ளடக்குவதை தவிர்ப்பீர்களா? 
  • அவர்களை எவ்வாறு குறிப்பிடுவீர்கள்? குறியீடாக்கம் செய்யப்பட்ட பட்டப்பெயர் கூட சிலரால் அவர்கள் அடையாளம் காணப்பட உதவலாம்.
  • பின்வரும் விடயங்கள் அனைத்தும் மூலம் யாராக இருக்க முடியும் அல்லது அவர்கள் எங்கே வசிக்கின்றனர் என்பதை உய்த்தறிவதற்கான விடயங்களை வழங்கும் என்பதை அறிந்திருங்கள்: 
  • பச்சை குத்தல், மச்சம், வடு அல்லது பிறப்புக் குறிகள் போன்ற தனித்துவம் மிக்க உடற் குறியீடுகள்;
  • உடை அல்லது நகைகள் போன்ற குறிப்பிட்ட பொருட்கள்,
  • பின்புலத்தில் காணப்படும் நில அடையாளங்கள், கட்டடங்கள் அல்லது மலைகள் போன்ற அடையாளம் காணக்கூடிய அம்சங்கள்,
  • பின்புலத்தில் காணப்படும் ஒரு புகைப்படம், கிண்ணம், தளவாடம், வாகனம், அல்லது சுவர் ஒட்டி காகிதம் போன்ற தனித்துவம் மிக்க பொருட்கள். 
உள்ளடக்கத்தைவெளியிடல்
  • கோப்புகளை ஏனையோருக்கு அனுப்பும் வேளை அவற்றில் உள்ள உள்ளடக்கம் தவிர்ந்த கோப்பு பற்றிய ஏனைய தரவுகளை (Metadata) அகற்றி விடவும். இந்த Metadata அந்த கோப்பை உருவாக்கிய அல்லது அனுப்பிய நபர், இடம், திகதி, நேரம் போன்ற தகவல்களை வழங்குவதுடன் அதனை உருவாக்க பயன்படுத்தப்பட்ட கருவியின் மாதிரி வடிவம் போன்ற தகவல்களையும் வழங்குகின்றது. 
  • மூலத்தின் கணணி அல்லது செல்லிடப்பேசி என்பவற்றின் திரைப் புகைப்படங்கள் (Screenshots) அந்த மூலத்தை அடையாளப்படுத்த உதவ வல்லன. இதில் உடைந்த பிக்ஸல் போன்ற முழுமையற்ற வடிவங்கள் அல்லது மவுஸ் ஐகன் ஒன்றின் வண்ணம் அல்லது பாணி போன்ற விடயங்களும் உள்ளடங்கலாம். 
  • அச்சிடப்பட்ட ஆவணங்களில் அச்சிடப்பட்ட பக்கங்களின் எண்ணிக்கை, திகதி மற்றும் நேரம் போன்ற தகவல்களுடன் அதனை அச்சிட பயன்படுத்தப்பட்ட அச்சு இயந்திரத்தின் வகை போன்ற தகவல்கள் பொதிக்கப்பட்டு காணப்படலாம். 
  • ஆவணங்களில் உள்ள மறைக்கப்பட்ட அல்லது மங்கலாக்கப்பட்ட தகவல்களை வெளிக்கொணரும் விசேட மென்பொருட்களும் காணப்படுகின்றன.
இரகசியத்தன்மையைபேணுதல் 
  • திட்டமான தேவை காணப்படாத நிலையில் உங்களின் மூலம் யார் என்பதை எவருக்கும் சொல்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள். 
  • உறுதி செய்யும் தகவல் எவற்றையும் எழுதுதல் அல்லது அச்சிடுவதை தவிருங்கள். மூலத்தின் முதலெழுத்துக்கள் அல்லது இடம் ஒன்றின் பெயர் போன்ற சிறிய விபரங்கள் கூட அவர்களை அடையாளம் காண உதவக் கூடும். 
  • சமூக ஊடகத்தை கண்காணியுங்கள். மூலத்தின் அடையாளம் வெளிப்பட்டு விடும் என குறிகாட்டிகள் காணப்பட்டால் அபாய மட்டத்தின் அளவுக்கு ஏற்ப அவர்களை பாதுகாப்பான இடம் ஒன்றுக்கு தற்காலிகமாக மாற்றுவது குறித்து பரிசீலியுங்கள்.