உடலியல் மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு: கைது மற்றும் தடுத்து வைக்கப்படல்

Law enforcement officers detaining journalists who were on assignment are photographed by a Reuters photographer a moment before his detention, in Minsk, Belarus July 28, 2020. All members of the media were released after being brought to and questioned at a local police station. REUTERS/Vasily Fedosenko - RC2E2I9T8YMB

மனித உரிமைகள் துஷ்பிரயோகங்கள், ஊழல், அல்லது சிவில் குழப்ப நிலை போன்ற விடயங்கள் தொடர்பான கதைகளை நீங்கள அறிக்கையிடும் வேளை, நீங்கள் கைது செய்யப்படும் மற்றும் தடுத்து வைக்கப்படும் வாய்ப்புகள் அதிகமாகும், குறிப்பாக அதிக இராணுவ மற்றும் பொலிஸ் பிரசன்னம் மிக்க சர்வாதிகார ஆட்சி நிலவும் நாடுகளில் இதன் சாத்தியம் உயர்வானதாகும். 

அதிகார தரப்புகளை எதிர்கொள்ளும் வேளை பொதுவாக அவர்களின் கட்டளைகளை ஏற்று நடக்கும் சூழ்நிலை உருவாகின்றது, அவர்களின் நடவடிக்கைகள் சட்ட விரோதமானவையாக இருப்பினும் உங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவ்வாறு நடந்து கொள்ள வேண்டியுள்ளது. 

ஊடகவியலாளர்கள் தம்மை சிறப்பாக பாதுகாத்துக் கொள்வதை உறுதி செய்ய பின்வரும் உடலியல் மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு அறிவுரையினை பின்பற்றுவதை கருத்திற்கொள்ள வேண்டும்.

டிஜிட்டல் பாதுகாப்பு அறிவுரை

சாத்தியமான கைது அல்லது தடுத்து வைக்கப்படுவதற்கு முன்னதாகவே உங்களின் கருவிகள் மற்றும் அவை கொண்டுள்ள தரவுகளை பாதுகாத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது உங்களைப் பற்றியும் உங்கள் மூலங்கள் பற்றியும் காணப்படும் தரவுகளை அணுகுவதற்கான சாத்தியத்தை குறைக்கும்.

உங்களின் கருவிகளை தயார்படுத்தல்

நீங்கள் கைது செய்யப்படும் அல்லது தடுத்து வைக்கப்படும் வேளை உங்களின் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டு அவற்றில் தேடுதல்கள் மேற்கொள்ளப்படும். 

உங்களின் கருவி மற்றும் அது கொண்டுள்ள தரவுகளைப் பாதுகாக்க பின்வரும் படிநிலைகளை பின்பற்றுங்கள்:

உங்களின் பயனர் கணக்குகளை பாதுகாத்தல்

நீங்கள் தடுப்புக்காவலுக்கு உட்படும் வேளை உங்களின் இணைய பயனர் கணக்குகளின் கடவுச் சொற்களை வழங்குமாறு கேட்கப்படலாம். உங்களின் பயனர் கணக்குகளை அவர்கள் அணுகுவதை உங்களால் தடுக்க முடியாத நிலையில், அவர்களுக்கு கிடைக்கும் தரவுகளின் அளவை குறைப்பதற்கான முன்தடுப்பு படிநிலைகளை உங்களால் மேற்கொள்ள முடியும். 

உங்களின் பயனர் கணக்குகளில் உள்ள உள்ளடக்கங்களுக்கான மக்களின் அணுகலை மட்டுப்படுத்தல்: 

உடலியல் பாதுகாப்பு அறிவுரை

ஒதுக்கப்பட்ட பணிக்கு செல்லும் முன்னர் கருத்திற் கொள்ள வேண்டியவை

— எதற்காக நீங்கள் கைது செய்யப்படலாம் / கைது செய்யப்பட முடியாது;

— முன்னர் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் விபரங்கள் மற்றும் அவர்கள் எவ்வாறு கைது செய்யப்பட்டனர்;

— குறித்த நாளில் எந்தப் பிரிவுகள் கைதுகளை மேற்கொள்ளும் சாத்தியம் மிக்கன (அதாவது: சீருடை அணிந்த பொலிசார், இரகசிய பொலிசார், இராணுவம் போன்றன);

— குற்றம் சுமத்தப்பட முன்னர் நீங்கள் எவ்வளவு காலம் தடுத்து வைக்கப்படலாம்;

— நீங்கள் தொலைபேசி அழைப்பு(களை) மேற்கொள்ள அனுமதிக்கப்படுவீர்களா, அவ்வாறு அனுமதிக்கப்பட்டால் யாருடன் பேச முடியூம்;

— உங்களின் மொழி பேசும் சட்டத்தரணி / சட்டப் பிரதிநிதியின் அணுகல் உங்களுக்கு வழங்கப்படுமா;

— சட்டத்தரணி சட்டப் பிரதிநிதிக்கு யார் பணம் செலுத்த வேண்டும்;

— உங்களின் தூதுவராலயம் / உயர் ஸ்தானிகராயலத்துக்கு உங்களின் கைது தெரியப்படுத்தப்படுமா (பொருத்தமாயின்);- கைது செய்யப்பட்டால் நீங்கள் எங்கே கொண்டு செல்லப்படும் சாத்தியம் உண்டு.

தொடர்பாடல்

பணிகளை மேற்கொள்ளும் வேளை

நீங்கள் கைது செய்யப்பட்டால் / தடுத்து வைக்கப்பட்டால்

CPJ  அமைப்பின் இணைய பாதுகாப்பு தொகுதி ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தி அறைகளுக்கு உடலியல், டிஜிட்டல் மற்றும் உளவியல் பாதுகாப்பு வளங்கள் மற்றும் கருவிகளை வழங்குகின்றது. இதில் மக்கள் கொந்தளிப்புகளின் போது ஊடகப்பணி மேற்கொள்வதும் உள்ளடங்குகின்றது. ஊடகவியலாளர்களுக்கு உதவி அவசியமாயின் CPJ  நிறுவனத்தை என்ற emergencies@cpj.com மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும். 

Exit mobile version