கொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்

PEDRO PARDO / AFP

கொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்

11 மார்ச் 2020, அன்று உலக சுதாகார அமைப்பு – WHO – COVID -19 அதாவது நாவல் கொரோனா பரப்பும் நோயை உலகளவில் ஒரு பெருந்தொற்று என்று அறிவித்தது. இவர்களின் படி உலகளவில் இந்த நோயின் பிடியில் உள்ளவர்களின் எண்ணிக்கை ஏறிக்கொண்டே போகின்றது. இந்த நோயை பற்றின சரியான மற்றும் நம்பகமான விவரங்கள் ஜான் ஹாப்கின்ஸ் யூனிவர்சிட்டி கொரோனா வைரஸ் ரிசோர்ஸ் சென்டர் இணையதளத்த்தில் கிடைக்கும்.

முக்கியமாக, உலகம் முழுவதும் பத்திரியாளர்களின் , மூலம் மக்களுக்கு சரியான விவரங்களும், அவர் அவர் நாட்டு அரசுகள் எடுக்கின்ற நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் போய் சேருகின்றன. இதனால் ஊடகத்தை சேர்ந்த ஒவ்வருவரும்  பயணம், பேட்டி, அல்லது அவர் செல்கின்ற இடத்தினால் – இந்த நோய் கிருமியால் வரும் பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்.

நிலைமை தொடர்ந்து உருவாகி, புதிய தகவல்கள் வெளிவருவதால், புதுப்பிக்கப்பட்ட சுகாதார ஆலோசனைகள் மற்றும் இந்த பெருந்தொற்று பற்றிய செய்திகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வழங்கப்படும். சமீபத்திய ஆலோசனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து தொடர்ந்து தெரிந்து கொள்ள, , இதை பற்றி செய்தி சேகரிக்கும்  ஊடகவியலாளர்கள் WHO விலிருந்து வெளிவரும் தகவல்கள் மற்றும் அவர்களின் உள்ளூர் பொது சுகாதார அமைப்பின் தகவல்களை கண்காணிக்க வேண்டும்.

செய்தி சேகரிக்கும் இடத்த்தில் பாதுகாப்பாக இருத்தல் 

பரந்த அளவிலான சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளை விதித்ததன் காரணமாக, பெரும்பான்மையான ஊடகப் பணிகள் உடனடி எதிர்காலத்தில்  உள்நாட்டு அடிப்படையிலேயே இருக்கும். உலகெங்கிலும் வேகமாக நகரும் மற்றும் வேகமாக மாறி வரும் சூழ்நிலைகள் காரணமாக அனைத்து பணிகளும் – சிறிது கால முன்னறிவிப்புடன்  அல்லது முன்னறிவிப்பே இல்லாமல்  மாற்றப்படலாம் அல்லது ரத்து செய்யப்படலாம்.

COVID-19 பெருந்தொற்றை பற்றி செய்தி சேகரிப்பவர்கள் பின்வரும் பாதுகாப்பு தகவல்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்:

செய்தி சேகரிப்புக்கு முன்

மனோதத்துவ நலம்

தொற்று தடுத்தல் மற்றும் பிறருக்கு தொற்று வராமல் தவிர்ப்பது

பல நாடுகள் இப்போது பொது / தனிப்பட்ட விலகலை கடைப்பிடிக்கின்றன. ஒரு சுகாதார வசதி, முதியோருக்கான பராமரிப்பு இல்லம், ஒரு நோய்வாய்ப்பட்ட நபரின் வீடு, ஒரு சவக்கிடங்கு, தனிமைப்படுத்தப்பட்ட மண்டலம், அடர்த்தியான நகர்ப்புற குடியிருப்பு (அதாவது சேரி அல்லது பவேலா), அல்லது விலங்கு சந்தைகள் மற்றும் / அல்லது ஒரு பண்ணைக்கு செல்வதாக இருந்தால்,  முன்கூட்டியே அந்த இடத்தில் இருக்கும் சுகாதார நடவடிக்கைகள்பற்றி விசாரிக்கவும். ஏதேனும் சந்தேகம் இருந்தால், அங்கே செல்வதை தவிர்ப்பது நல்லது. தொற்றுநோயைத் தவிர்ப்பதற்கான நிலையான பரிந்துரைகள் பின்வருமாறு:

 உபகரணங்கள் பாதுகாப்பு

தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணம் (PPE)

எந்தவொரு பிபிஇயையும் (டிஸ்போஸபிள் கையுறைகள், முகமூடிகள், பாதுகாப்பு கவசங்கள் மற்றும் டிஸ்போஸபிள் ஷூ கவர்கள் போன்றவை) பாதுகாப்பாக போட்டு கொள்ளும்பொழுது மற்றும் களையும்போது சிறந்த பாதுகாப்பு நடைமுறைகளை கண்டிப்பாக கடைபிடிப்பது மிக அவசியம். சி.டி.சி யின் பொதுவான வழிகாட்டுதலுக்கு இங்கே கிளிக் செய்க. இதில் குறுக்கு மாசுபடுவதற்கான ஆபத்து அதிகம், எனவே இந்த நடவடிக்கைகள் குறித்து கவனக்குறைவு கொள்ள வேண்டாம்.

சுகாதார வசதி அல்லது சவக்கிடங்கு போன்ற பாதிக்கப்பட்ட தளத்தில் பணிபுரிந்தால், நீங்கள் டிஸ்போஸபிள் பாதணிகளை அணிய வேண்டும் அல்லது வாட்டர்ப்ரூப்  ஓவர்ஷூ பயன்படுத்த வேண்டியிருக்கும், இவை இரண்டும் நீங்கள் இருப்பிடத்திலிருந்து வெளியேறியவுடன் துடைக்கப்பட வேண்டும் / சுத்தம் செய்ய பட வேண்டும் .வாட்டர்ப்ரூப்  ஓவர்ஷூ பயன்படுத்தினால், அந்த இடத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பு அவை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தப்பட வேண்டும், அவற்றை மீண்டும் பயன்படுத்தக்கூடாது.

மருத்துவ சிகிச்சை வசதி போன்ற பாதிக்கப்பட்ட தளத்தில் பணிபுரிந்தால் அல்லது பார்வையிட்டால் பாதுகாப்பு கையுறைகளைப் பயன்படுத்துங்கள்.பாடிசூட் மற்றும் ஃபுல் ஃபேஸ் மாஸ்க் போன்ற பிற மருத்துவ PPE கூட தேவைப்படலாம்.

முகமூடிகள்

CDC மற்றும் உலக சுதாகர அமைப்பு -WHO– தற்போது , நோய் அறிகுறிகள் இல்லாதவர்கள் முகமூடி அணிவது அவசியமில்லை என்கிற ,உடன்பாட்டில் உள்ளன –  உள்ளூர் அதிகாரிகளால் அவ்வாறு செய்யும்படி கூறப்படும்வரை, அல்லது  நீங்கள் ஒரு மருத்துவமனை போன்ற அதிக ஆபத்துள்ள பகுதியில் இருக்கிறீர்கள்; அல்லது COVID-19 நோய்த்தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை நீங்கள் கவனித்து வருகிறீர்கள் என்றால். பல நாடுகளில் அறுவைசிகிச்சை பிபிஇ குறைவாகவே உள்ளது என்பதை நினைவில் கொள்க, எனவே இதுபோன்ற உபகரணங்களைப் பயன்படுத்துவது பற்றாக்குறையை உருவாக்கும். நீங்கள் முகமூடி அணிந்தால் பின்வரும் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும்:

டிஜிட்டல் பாதுகாப்பு

பணியின்போது தனிப்பட்ட பாதுகாப்பு 

சர்வதேச பயண பணிகள்

உலகளாவிய பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக, சர்வதேச பயணம் இப்போது மிகவும் சவாலானது மற்றும் மிகவும்  அரிதாக உள்ளது. வெளிநாட்டு பணியில் செல்வதாக இருந்தால்,  நீங்கள் பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்:

செய்தி சேகரிப்பு பணிக்கு [பிறகு 

உங்களுக்கு நோயின் அறிகுறிகள் தோன்றினால்

CPJ வின் Online Safety Kit  பத்திரிகையாளர்கள் மற்றும் செய்தி அறைகளுக்கு உடல், டிஜிட்டல் மற்றும் மனோதத்துவ பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் கருவிகள் பற்றிய அடிப்படை பாதுகாப்பு தகவல்களை வழங்குகிறது, இதில் உள்நாட்டு அமைதியின்மை மற்றும் தேர்தல்களை பற்றி செய்தி சேகரிப்பு உட்பட.