PEDRO PARDO / AFP

கொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்

Updated May 20, 2021

11 மார்ச் 2020, அன்று உலக சுதாகார அமைப்பு – WHO – COVID -19 அதாவது நாவல் கொரோனா பரப்பும் நோயை உலகளவில் ஒரு பெருந்தொற்று என்று அறிவித்தது. உலகளவில் நிலமை பரிணாம மாற்றம் அடைந்து கொண்டே போகிறது. செய்திகள் மூலம் கிடைக்கும் தகவல் படி புதிய கொரொனோ வைரஸ் வகைகள் அடையாளம் காணப் பட்டு வருவதாலும் தடுப்பூசி நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப் பட்டு வருவதாலும் பல நாடுகள் பயணக் கட்டுப் பாடுகளையும் பாதுகாப்பு சம்பந்தமான நடவடிக்கைகளையும் அதிகப் படுத்துவது அல்லது தளர்த்துவது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

முக்கியமாக, தனிப்பட்ட செய்தி வெளியீடு மற்றும் தகவல் தொடர்புக்கு எதிராக அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைளையும் மீறி, உலகம் முழுவதும் பத்திரியாளர்கள் மூலம் பெருந்தொற்று, அதற்கு எதிராக அரசுகள் எடுக்கின்ற நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் CPJ பதிவு செய்துள்ள படி  மக்களுக்கு சரியான  விதத்தில் போய்ச் சேருகின்றன. ஊடகப் பணியாளர்கள் மிக அதிக அளவில் மன அழுத்தத்திற்கும் பிரச்சனைக்கும் ஆளாகிறார்கள். இதனால் ஊடகத்தை சேர்ந்த ஒவ்வருவரும்  பயணம், பேட்டி, அல்லது அவர் செல்கின்ற இடத்தினால் – தொற்றுக்கு ஆளாகிறார்கள். CPJ’S INTERVIEW WITH JOURNALISTS. கோவிட் – 19 தொற்றினால் பத்திரிகையாளர்கள் மீதான தணிக்கை நடவடிக்கை, பிடித்து வைக்கப் படுதல், உடல் மற்றும் மன ரீதியான இணையதளத் தாக்குதல், தங்கள் வாழ்வாதார இழப்பு ஆகியவற்றுக்கு ஆளாகியுள்ளனர் IN RECENT REPORTING BY CPJ.

இந்தத் தொற்று சம்பந்தமான அறிவுரைகள் மற்றும் கட்டுப் பாடுகள் பற்றி அறிய இந்த விவரங்களை சேகரிக்கும் பத்திரிகையாளர்கள்  உள்ளூர் சுகாதார  அமைப்புகள் மற்றும் உலக சுகாதார மையத்திலிருந்து வெளியிடப் படும் தகவல்களை கவனித்து வர வேண்டும். சமீபத்திய தாக்கம் பற்றிய செய்திகளுக்கு Johns Hopkins University Coronovirus Resource Center . பாதுகாப்பான மற்றும் நம்பத்தகுந்த ஆதாரமாகும்.

பணித் தளத்தில் பத்திரமாக இருத்தல்:

நாடுகளுக்கு இடையிலான கட்டுப் பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மாறிக் கொண்டேயிருக்கின்றன. அதனால் பணிகள் மாறவோ, ரத்து செய்யப் படவோ நேரலாம். U.S. Centers for Disease control and Prevention (CDC) யின் அறிக்கைப் படி தடுப்பூசி போடப் பட்ட ஊடகப் பணியாளர்கள மூலமும் தொற்று பரவலாம். Yale Medicine அறிக்கையின் படி வெவ்வேறு தடுப்பூசிகள் வெவ்வேறு வகையான வைரஸ்களுக்கு எதிராக வெவ்வேறு அளவிலான பாதுகாப்பு அளிக்கின்றன. எனவே பாதுகாப்பான இடைவெளி காத்தல், முக்க்கவசம் அணிதல் ஆகிய கோவிட்- 19 தொற்று சம்பந்தமான பாதுகாப்பு கட்டுப் பாடுகள் கடைப் பிடிக்கப் பட வேண்டும்

COVID-19 பெருந்தொற்றை பற்றி செய்தி சேகரிப்பவர்கள் பின்வரும் பாதுகாப்பு தகவல்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்:

பணிக்கு முன்னால்:

  • முக்கியமாக நீங்கள் வேலை செய்ய வேண்டிய அல்லது பயணம் செய்ய வேண்டிய இடம் அதிக அளவில் தொற்றினால் பாதிக்கப் பட்டிருக்குமானால் , பணியில் ஈடுபடுவதற்கு முன், உங்களுக்கு அதனால் பிரச்சனை ஏற்படாது என்றால், தடுப்பூசி போட்டுக் கொள்வதை பற்றி யோசியுங்கள்.
  • நீங்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் தொற்றின் தீவிரத்தைப் பொறுத்து, தொற்று பரவும் அபாயத்தைத் தவிர்க்க போன் அல்லது இணையதள நேர்காணல் நடத்தலாம்.
  • அமெரிக்காவின் US Centers for Disease Control and Prevention (CDC) படி,  வயதானவர்கள் மற்றும் நீரிழிவு மற்றும் அதிகப் பருமன் போன்ற அடிப்படை சுகாதார பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு  அதிக ஆபத்து என்று கருதப்படுகிறது. நீங்கள் அத்தகைய வகைகளுக்குள் வந்தால், அங்குள்ள தொற்றின் அளவைக் கருத்தில் கொண்டு பொது மக்களுடன் உங்களை நேரடியாக தொடர்பு கொள்ளும் எந்தவொரு வேலையிலும் நீங்கள் பங்கேற்கக்கூடாது. கர்ப்பமாக இருக்கும் எந்தவொரு ஊழியரும் கவனத்தில் கொள்ளப் பட வேண்டும்.
  • New York Times அறிவித்துள்ள படி கோவிட் 19 பெருந்தொற்று பற்றி செய்தி சேகரிக்கும் பணிக்கு தேர்ந்தெடுக்கும் போது சில தேசிய இனங்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதல்களை நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும், 
  •  உலகளவிலான கட்டுப்பாடுகள் மற்றும் முடக்க அளவுகள் எந்த முன்னெச்சரிக்கையும் இன்றி மாற்றப்படலாம்.  தனிமைப் படுத்தப் படுதல்  மற்றும் முடக்கப் பட்ட இடத்தில் அடைக்கப் படுதல், பணியில் நோய்வாய்ப் படுதல் போன்றவை நேரும் பட்சத்தில் உங்கள் நிர்வாகம் உங்களுக்கு ஆதரவாக செயல் பட என்ன திட்டங்கள் வைத்திருக்கிறது என்று அறிந்து கொள்ளுங்கள்.

மனோதத்துவ நலம்:

  • Reuters Institute at the University of Oxford அறிக்கையின் படி அதிக அனுபவமுள்ள பத்திரிகையாளர்கள் கூட கோவிட் 19 பெருந்தொற்று செய்தி சேகரிக்கும் பணியில் உளரீதியாக பாதிக்கப் படலாம். எனவே, நிர்வாகம் தங்கள் பத்திரிகையாளர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை அவ்வப்போது கண்காணித்து வரவேண்டும்.
  • நீங்கள் COVID-19 ஆல் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் செய்தி திரட்டுவராக இருந்தால் குறிப்பாக மருத்துவ அல்லது தனிமைப்படுத்தும் வசதி அல்லது தனிமைப்படுத்தப்பட்ட இடத்திலிருந்து செய்தி சேகரிப்பவர்களாக இருந்தால், உங்கள் மனோதத்துவ பாதிப்பை நினைவில் வைத்து கொள்ள வேண்டும். அதிர்ச்சிகரமான சூழ்நிலைகளில் செய்தி திரட்டும் ஊடக ஊழியர்களுக்கான விவரங்கள் கிடைக்கும் ஒரு இணையத்தளம்: the DART Center for Journalism and Trauma. பாதுகாப்பு மற்றும் மனநலம் சம்பந்தமான விவரங்களுக்கு CPJ’s Emergencies’s page.

தொற்று தடுத்தல் மற்றும் பிறருக்குத் தொற்று வராமல் தவிர்ப்பது:

எல்லா நாடுகளும் சமுதாய மற்றும் உடலளவிலான இடைவெளி கடைப் பிடிப்பதைத் (தொடருகிறார்கள். அதற்கான அளவுகள் அந்தந்த நாடுகளில் வேறாக இருக்கலாம். அதிக ஆபத்துள்ள இடங்களில் பணியில் இருந்தால் முன்னதாக அங்கு செயலில் உள்ள சுகாதார முறைகள் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். சந்தேகம் இருந்தால் அந்த இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து விடுங்கள்.

  • முதியவர்களுக்கான இல்லங்கள், 
  • நோயுற்றவர்கள், கர்ப்பிணிகள் உள்ள இடங்கள், 
  • சுகாதார நிலையங்கள், 
  • சவக்கிடங்குகள், 
  • இறுதிச் சடங்கு நடக்கும் இடங்கள், 
  • தனிமைப் படுத்தப் படும் இடங்கள்
  • முடக்கப் பட்ட இடங்கள்
  • அதிக மக்கள் நெருக்கம் உள்ள குடிசைவாழ் இடங்கள்
  • அகதிகள் முகாம், சிறைச்சாலை போன்ற தொற்று பரவியுள்ள இடங்கள் 
  • மற்றும் தொற்று தீவிரமாக தாக்கக் கூடிய இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து விடுங்கள்.  

 தொற்றுநோயைத் தவிர்ப்பதற்கான நிலையான பரிந்துரைகள்   பின்வருமாறு:

  • அறிவுறுத்தப் படும் பாதுகாப்பான தூரத்தை  (social/ physical distancing)எல்லோருடனும் கடைப் பிடிக்கவும். அது அந்த இடத்தின் அதிகாரிகளின் அறிவுரைப் படி மாறலாம். இருமல் மற்றும் தும்மல் போன்ற சுவாச நோயின் அறிகுறிகளைக் காண்பிப்பவர்களின் அருகில கவனமாக இருங்கள். 
  • செய்தி திரட்டும் பணியில்  பத்திரிகையாளர்கள் நேர்காணல்கள் செய்யும்போது – வயதானவர்கள், அடிப்படை சுகாதார நிலைமைகள் உள்ளவர்கள், COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் சுகாதாரப் பணியாளர்கள் அல்லது அதிக  ஆபத்தான இடத்த்தில் உள்ள தொழிலாளர்கள், அல்லது இந்த நோயின் ஏதேனும் அறிகுறி உள்ளவரிடம் குறிப்பாக விழிப்புடன் இருக்க வேண்டும்.
  • நேர்காணலை வெளியிடங்களில் வைத்துக் கொள்ள முயலுங்கள். கட்டிடங்களுக்கு உள்ளே வைத்துக் கொள்ள நேர்ந்தால் சிறிய மூடிய இடங்களைத் தவிர்த்து திறந்த ஜன்னல்கள் அல்லது காற்றோட்டமுள்ள இடங்களில் அமைக்கவும்,
  • மற்றவர்களோடு கைகுலுக்குதல், முத்தமிடுதல், கட்டியணைத்தல் ஆகியவற்றைத் தவிருங்கள்.
  • நேர் காணலின் போது மற்றவர்களோடு நேர் எதிரில் இல்லாமல் வேறு கோணத்தில் பாதுகாப்பான உரிய தூரத்தில் இருக்க முயலுங்கள். 
  • சூடான நீர் மற்றும் சோப்பைப் பயன்படுத்தி ஒரு நேரத்தில் குறைந்தது 20 விநாடிகள் உங்கள் கைகளைத் தவறாமல், ஒழுங்காக, முழுமையாகக் கழுவ வேண்டும். கைகள் சரியான வழியில் உலர்த்தப்படுவதை உறுதி செய்யுங்கள். உங்கள் கைகளை சரியாக கழுவி உலர்த்துவது எப்படி என்பது குறித்த மிகவும் பயனுள்ள வழிகாட்டியை WHO இணையதளத்தில் காணலாம்
  • சூடான நீர் மற்றும் சோப்பு கிடைக்கவில்லை என்றால் ஆன்டி-பாக்டீரியா ஜெல் அல்லது துடைப்பான்களைப் பயன்படுத்துங்கள், ஆனால் இதை தொடர்ந்து எப்போதும் சூடான நீர் மற்றும் சோப்பு உபயோகித்து மீண்டும் கழுவவும். (60% க்கும் அதிகமான எத்தனால் அல்லது 70% ஐசோபிரபனோல் கொண்ட ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசர்  பயன் படுத்துவதை CDC பரிந்துரைக்கிறது ஆனால் வழக்கமான கை கழுவுதல் பழக்கத்தை கை சானிடைசர் பயன்படுத்துவதன் மூலம் மாற்ற வேண்டாம்.
  • இருமல் மற்றும் தும்மும்போது எப்போதும் உங்கள் வாய் மற்றும் மூக்கை மூடிக் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு டிஷ்யூவில் இருமினால் அல்லது தும்மினால், உடனடியாக அதை பாதுகாப்பான மற்றும் பொருத்தமான முறையில் அப்புறப்படுத்துங்கள், பின்னர் உங்கள் கைகளை நன்கு கழுவுங்கள்.
  •  உங்கள் முகம், மூக்கு, வாய், காதுகள் போன்றவற்றைத் தொடுவதைத் தவிர்க்கவும். 
  • மற்றவர்கள் உபயோகித்த கோப்பைகள், பீப்பாய்கள் அல்லது கட்லரிகளில் இருந்து குடிப்பதை / சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
  • மற்றவர்கள் உபயோகித்த கோப்பைகள், பீப்பாய்கள் அல்லது கட்லரிகளில் இருந்து குடிப்பதை / சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
  • உங்கள் தலைமுடியை முழுவதுமாக மூடி வைத்துக் கொள்ளுங்கள். நீண்டமுடி தூக்கிக் கட்டப் பட்டிருத்தல் வேண்டும்.
  • பணிக்கு முன் நீங்கள் அணிந்துள்ள நகைகள், கைகடிகாரங்களை நீக்கி விடுங்கள். நோய்த் தொற்று பல பொருள்களின் மேல் வெவ்வேறு கால அளவில் உயிர்ப்புடன் இருக்கக் கூடும்.
  • நீங்கள் கண்ணாடி அணிந்தால், அவற்றை சுடு நீர் மற்றும் சோப்புடன் அவ்வப்போது தவறாமல் சுத்தம் செய்யுங்கள்.
  • சில துணிகள் மற்றவைகளை விட எளிதாக சுத்தம் செய்யப் படக்கூடியவை என்பதை கணக்கில் கொண்டு, நீங்கள் என்ன ஆடைகளை அணிவீர்கள் என்பதை உறுதி செய்யுங்கள். எந்தவொரு வேலையும் முடிந்தபின் அனைத்து ஆடைகளையும் சோப்புடன் அதிக வெப்பநிலையில் கழுவ வேண்டும்.
  • முடிந்தவரையிலும் கரன்சி நோட்டுகளைப் பயன்படுத்துவதைத் தவிருங்கள். உங்கள் க்ரெடிட், டெபிட் கார்டுகளையும் வாலட், பர்ஸ் ஆகியவைகளையும் முறையாக அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். உங்கள் கைகளை உங்கள் ஆடைகளின் பாக்கெட்டுகளில் வைத்துக் கொள்வதைத் தவிருங்கள்.
  • செய்தி சேகரிக்கும் பணிக்குச் செல்வதும் அங்கிருந்து திரும்பி வருவதற்கான போக்குவரத்து முறையைக் கவனியுங்கள். அவசர நேரத்தில் பொதுப் போக்குவரத்தில் பயணிப்பதைத் தவிர்க்கவும். தவிர்க்க முடியாவிட்டால்  இறங்கும்போது கைகளில் ஆல்கஹால் ஜெல் பயன்படுத்துங்கள்.  ஜன்னல்களைத் திறந்து வைப்பதன் மூலம் வாகனம் முழுவதும் காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்யுங்கள். வாகனங்களுக்கு உள்ளே இருக்கும் போது முகக்கவசம் அணிவதை உறுதி செய்யுங்கள்.
  • உங்கள் சொந்த வாகனத்தில் பயணம் செய்தால், உங்கள் வாகனத்தில் பாதிக்கப்பட்ட பயணி ஒருவர் இருந்தால் அவர் மற்றவர்களுக்கு வைரசால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்
  • சோர்வடைந்த நபர்கள் தங்கள் சுகாதார வழக்கத்தில் தவறுகளைச் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை கணக்கில் எடுத்துக்கொண்டு, வேலை செய்யும்போது அவ்வப்போது ஓய்வு இடைவெளிகளை எடுத்துக் கொள்ளுங்கள் மற்றும் சோர்வு / ஆற்றல் நிலைகளில் கவனம் செலுத்துங்கள்.
  • சில நபர்களுக்கு  வேலைக்காக செல்லவும், அங்கிருந்து திரும்பி வரவும் வெகு தூரம் வாகனம் ஓட்ட வேண்டியிருக்கும் என்று நினைவில் கொள்ளுங்கள்.

மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள்- (PPE)

வேலையின் இயல்புக்கேற்ப ஊடகப் பணியாளர்கள் பணிக்காக பல விதமான மருத்துவ PPE உபகரணங்களை அணியத் தேவைப் படலாம். ஒரே முறை உபயோக்க்கூடிய கையுறைகள், முக்க்கவசங்கள், பாதுகாப்பு மேலணிகள், காலணிகள் இவற்றில் சேரும்.

PPE உறைகளைப் பத்திரமாக அணிவதும், கழற்றுவதும் பாதுகாப்பு முறைகளை முறையாகக் கையாளுவதும் அவசியம். முக்கியமாக PPE கழற்றும் போது கவனம் தேவை. ஏனென்றால் அப்போது CROSS CONTAMINATION மூலம் தொற்று பரவும் வாய்ப்பு அதிகம். எனவே அதற்கான முறைகளை சரியாக அறிய இங்கு பார்க்கவும்.சில நாடுகளில் தரமான PPE கிடைப்பதில் பிரச்சனை  இருக்கலாம். எனவே பயன்படுத்துவதற்கு கிடைக்காமல் போகலாம்.

  • உங்களுக்கு ஏற்ற அளவிலான PPE கிடைப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சரியாகப் பொருந்தாத PPE கிழிந்து போகவும் உங்கள் செயல்களூக்கு இடையூறாகவும், தளர்வான அளவில் இருந்தால் கைப்பிடிகளில் மாட்டிக் கொள்ளவும் நேரலாம்.
  • எப்போதும் பிரபலமான ப்ராண்ட் PPE உபயோகியுங்கள். குறைந்த பட்ச பாதுகாப்பிற்கான தரம் இருப்பதை உறுதி செய்யுங்கள். போலியான, தவறானவற்றை PPE உபயோகிக்காதீர்கள். சில நல்ல ப்ராண்ட்கள் பற்றிய தகவல்கள் இங்கே தரப்பட்டுள்ளது.
  • மருத்துவமனைகள் போன்ற தொற்று பாதித்த இடங்களில் இருந்து ரிப்போர்ட் செய்யும் போதும், அங்கு செல்லும் போதும் மருத்துவ PPE போன்ற முழுவதும் மூடப் பட்ட உடைகள் மற்றும் முக்கவசம் அணிவது மிக அவசியம். நைட்ரைல் கையுறைகள் லேடக்ஸ் கையுறைகளை விட அதிக பாதுகாப்பானது என்று அறியுங்கள். இரண்டு செட் உறைகளை அணிவது பாதுகாப்பை அதிகரிக்கும்.
  • அதிக ஆபத்தான இடங்களில் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபடும் போது முழு உடம்பையும் மூடும் வண்ணம்அதிகப் படியான மருத்துவ PPE மற்றும் முகக்கவசம் நிச்சயமாகத் தேவைப் படும்.
  • முழு உடலையும்  மூடக்கூடிய கவசங்கள் அணிவதற்கு முன்னால் ரெஸ்ட்ரூம் உபயோகிக்கத் தவறாதீர்கள்.
  • உங்கள் பணிக்கு ஏற்ப நீங்கள் டிஸ்போஸபிள் பாதணிகளை அணிய வேண்டி வரலாம். அல்லது வாட்டர்ஃப்ரூப்  ஓவர்ஷூ பயன்படுத்த வேண்டியிருக்கும், இவை இரண்டும் நீங்கள் இருப்பிடத்திலிருந்து வெளியேறியவுடன் துடைக்கப்பட வேண்டும்/ சுத்தம் செய்ய பட வேண்டும் .வாட்டர்ஃப்ரூப்  ஓவர்ஷூ பயன்படுத்தினால், அந்த இடத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பு அவை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தப்பட வேண்டும், அவற்றை மீண்டும் பயன்படுத்தக்கூடாது.
  • PPE அணிவதும் நீக்குவதும் அது பற்றிய பயிற்சி உள்ளவர்களின் மேற்பார்வையில்  செய்யப் பட வேண்டும். ஏனென்றால் இந்தச் செயல்களின் போது தான் தொற்று பரவும் வாய்ப்புகள் அதிகம். இதற்கான (donning  and doffing video) CDC வீடியோ உபயோகமாக இருக்கலாம் , ஆனால் பயிற்சி அளிக்கப் பட்டவர்களின் உதவிக்கு ஈடாகாது.
  • ஒருமுறை மட்டுமே உபயோகிக்கக் கூடிய PPE, கையுறைகள், மேலணிகள், காலணிகள், உறைகளை மறுமுறை உபயோகிக்காதீர்கள். அவை அவை சரியான முறையில் கிருமி நீக்கம் செய்யப் பட்டு, சுத்தப் படுத்தப் பட வேண்டும். நீங்கள் உபயோகித்தவை சரியான முறையில் நீக்கப் பட்டுள்ளன என்பதை அங்கிருந்து செல்வதற்கு முன் உறுதி செய்து கொள்ளுங்கள்.

முகக்கவசம்:

பொது ஜனங்களின் இடையேயும், மூடப் பட்ட இடங்களிலும் அதிக ஆபத்தான இடங்களிலும் பணி புரியும் ஊடகப் பணியாளர்கள் சரியான முறையில் முகக்கவசம் அணிவது மிக முக்கியம். காற்றில் கிருமித் தொற்றின் துளிகள் அதிகமாக இருக்கும் வாய்ப்பு மூடப்பட்ட இடங்களில் சராசரியை விடக் கணிசமான அளவில் அதிகமாக இருக்கும் என்பதால் நோய்த் தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்பும் அதிகமாக இருக்கும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம்.

சரியாகப் பயன்படுத்தப் படாவிட்டால் முகக்கவசங்களே தொற்று பரவுவதற்கு ஆதாரமாக அமையும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். LANCET ஆல் நடத்தப் பட்ட ஆய்வில் சர்ஜிகல் மாஸ்க் உபயோகப் படுத்தப் பட்ட பின் ஏழு நாட்களுக்குப் பிறகும் அறியக் கூடிய அளவில் தொற்றுக் கிருமிகள் இருந்தது தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில் ஒருமுறை உபயோகப் படுத்தப் பட்ட முக்கவசத்தை நீக்குவதும், திரும்ப உபயோகிப்பதும், அணிந்திருக்கும் போது தொடுவதும் தொற்றுக்கான வாய்ப்பை உண்டாக்கும்.

நீங்கள் முக்கவசம் அணியும் போது கவனிக்க வேண்டிய அறிவுரைகள்:

  • மூடப் பட்ட இடங்களில் மற்றவர்களுக்கு அருகில் இருக்க வேண்டிய சூழ்நிலைகளில் அதிக ஆபத்தான சூழ்நிலைகளில் SURGICAL MASK பதிலாக N95 முகக்கவசம் அணிவது பரிந்துரைக்கப் படுகிறது. 
  • முகக்கவசம் மூக்கு மற்றும் மோவாய் இரண்டையும் இடைவெளி இல்லாமல் மூடும் விதத்தில் அமைந்திருப்பது உறுதி படுத்தப் பட வேண்டும்.
  • முகத்துக்கு உறுதியான காப்பு கொடுப்பதற்காக முகத்தில் முடி இல்லாமல் இருப்பது அவசியமாகிறது.
  • முகக்கவச பாதுகாப்பை சரிவர செயல் படுத்துவது மிக அவசியம். முகக்கவசத்தைத் தொடுவதைத் தவிர்க்கவும், பட்டைகளைப் பயன்படுத்தி மட்டுமே அதை அகற்றவும். ஒருபோதும் முன் பாகத்தை தொடக்கூடாது.  மிக அவசியம் என்றால் தவிர முகக்கவசத்தை சரிசெய்து கொள்ளுவதைத் தவிர்க்கவும். முகக்கவசத்தைத் தொட நேரும் நிலையில் கைகளை உடனடியாக சுத்தம் செய்யவும்.
  • முகக்கவசத்தை மறுமுறை உபயோகிப்பது மிக ஆபத்தானது. உபயோகித்த முகக்கவசங்களை நீக்கியதும் சீல் செய்யப் பட்ட பைகளில் வைத்து அப்புறப்படுத்தவும். 
  • முகக்கவசம் ஈரமாகி விட்டால் அதை புதிய உலர்ந்த ஒன்றால் மாற்றிக் கொள்ளவும். 
  • முகக்கவசத்தைப் பயன்படுத்துவது தனிப்பட்ட பாதுகாப்பின் ஒரு பகுதி மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள், இது தொடர்ந்து உங்கள் கைகளை சுடு நீர் மற்றும் சோப்புடன் கழுவ வேண்டும் மற்றும் உங்கள் கண்கள், வாய், காதுகள் மற்றும் மூக்கு உள்ளிட்ட உங்கள் முகப் பகுதியைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • முகக்கவசங்கள் கிடைப்பதில் பிரச்சனை ஏற்படக்கூடும் என்பதையும் சில இடங்களில் அதன் விலை மிக அதிகமாக இருக்கலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

உபகரணப் பாதுகாப்பு:

தொற்று பாதிக்கப் பட்ட உபகரணங்கள் மூலம் பரவும் என்பது உண்மை. கண்டிப்பான சுத்தம் செய்தல் மற்றும் தொற்று நீக்கம் செய்யும் பழக்கம் எல்லா நேரங்களிலும் செயல் படுத்தப் பட வேண்டியது அவசியம்.

  • கிளிப் மைக்குகளுக்குப் பதிலாக பாதுகாப்பான தூரத்திலிருந்து உபயோகப் படுத்தக் கூடிய  ‘ஃபிஷ்போல்’ மைக்ரோஃபோன்களைப் பயன்படுத்தவும். கிளிப் மைக்குகள் அவை சம்பந்தமான நெறிமுறைகள் கையாளப் பட்டு கட்டுப் பாடான சூழ்நிலைகளில் மட்டுமே உபயோகப் படுத்தப் பட வேண்டும்.
  • ஒவ்வொரு வேலையின் முடிவிலும் மைக்ரோஃபோன் கவர்கள் நன்கு கழுவப்பட்டு கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும். எந்தவொரு மாசுபாட்டையும் தடுக்க மைக்ரோபோன் அட்டையை எவ்வாறு  பாதுகாப்பாக அகற்றுவது என்பது குறித்த வழிகாட்டுதல் / பயிற்சி பெறவும். WIND MUFF கவர்களை சுத்தம் செய்வது கடினமென்பதால் அவற்றை உபயோகிப்பதைத் தவிருங்கள்.
  • விலை மலிவான இயர் போன்களை அப்புறப் படுத்துவது எளிதென்பதால் நிகழ்ச்சியின் விருந்தினருக்கு அதை உபயோகியுங்கள். ஒவ்வொரு முறையும் உங்கள் இயர் ஃபோன்களை உபயோகப் படுத்துவதற்கு முன்னும் பின்னும் கிருமி நீக்கம் செய்யுங்கள்.
  • பாதுகாப்பான இடைவெளிக்காக லாங் சைட் லென்ஸ்களை உபயோகியுங்கள்.
  • எங்கெல்லாம் முடியுமோ அங்கு கேபிளால் இணைக்கப் படாத மொபைல் சாதனங்களை உபயோகியுங்கள்.
  • உங்கள் உபகரணங்களை எப்படி பாதுகாப்பாக வைப்பது என்பது பற்றித் தீர்மானியுங்கள். எதையும்  கீழே கிடக்கும் படி விடாமல் அதற்குரிய கவர்களில்  போட்டு வையுங்கள். எளிதில் சுத்தம் செய்யக் கூடிய கடின உறைகளில் அவற்றைப் பாதுகாக்கவும்.
  • முடியுமென்றால் உபகரணங்களைச் சுற்றி பிளாஸ்டிக் உறைகளால் மூடி உபயோகியுங்கள். இதனால் தொற்று பரவும் சந்தர்ப்பங்கள் குறையலாம் மற்றும் கிருமி நீக்கம் செய்வதும் எளிதாகும்.
  • முழுவதுமாக சார்ஜ் செய்யப் பட்ட பாட்டரிகளை எடுத்துச் செல்லுங்கள். வேலையிடத்தில் சார்ஜ் செய்வதைத் தவிருங்கள். 
  • மெலிசெப்டால் போன்ற வேகமாக செயல்படும் ஆண்டிமைக்ரோபையல் துடைப்பான்கள் மூலம் எல்லா சாதனங்களையும் சுத்தம் செய்து, கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.. இந்த சாதனங்களில்  செல்போன்கள், டேப்லெட்டுகள், லீட்ஸ், செருகல்கள், காதணிகள், மடிக்கணினிகள், ஹார்ட் டிரைவ்கள், கேமராக்கள், பிரஸ் பாஸ் மற்றும் லேனியார்ட்ஸ் அடக்கமாகும்.
  • எல்லா உபகரணங்களும் அதை தளத்திற்குத் திருப்பித் தரும்போது மீண்டும் தூய்மையாக்கப்படுவதை உறுதிசெய்து, சாதனங்களுக்குப் பொறுப்பானவர்கள் அவை பற்றி முன்கூட்டியே முழுமையாக அறிந்திருக்கிறார்கள் என்பதையும், சாதனங்களை எவ்வாறு பாதுகாப்பாக சுத்தம் செய்வது என்பதில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதையும் உறுதிசெய்க.  சுத்தம் செய்வதற்குப் பொறுப்பான நபரிடம் மீண்டும் ஒப்படைக்காமல் எந்த உபகரணங்களும் கேட்பாரில்லாமல் சுற்றி கிடக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • உங்கள் வேலைக்கு ஒரு வாகனத்தைப் பயன்படுத்தினால், அது ஒழுங்காக பயிற்சியளிக்கப்பட்ட ஒரு குழுவினரால் அந்த வேலை முடிந்தபின் உள் பாகம் முழுமையாக  சுத்தம் செய்யப்பட வேண்டும். கதவு கைப்பிடிகள், ஸ்டீயரிங், கியர் ஸ்டிக், ஹேண்ட் ப்ரேக் லீவர், விங் கண்ணாடிகள், ஹெட் ரெஸ்ட்கள், சீட் பெல்ட்கள், டாஷ்போர்டு மற்றும் சாளர விண்டர் / கேட்சுகள் / பொத்தான்கள் குறித்து குறிப்பாக கவனம் செலுத்தப்பட வேண்டும்.

மின் சாதன சுத்தம்:

மின் சாதனங்களை சுத்தம் செய்வது சம்ப்ந்தமான சில குறிப்புகள்:  உபகரணங்களின் தயாரிப்பாளர்களின் வழிகாட்டிகளை முறையாக படித்து நிச்சயம் செய்து கொள்ளுங்கள்.

  • சுத்தம் செய்வதற்கு முன் சாதனங்களின் மின் இணைப்புகளைத் துண்டித்து வையுங்கள்.
  • Aerosol Sprays, Bleaches, Abrasives போன்ற எந்த திரவத்தையும் சாதனங்களைச் சுத்தம் செய்ய உபயோகிக்காதீர்கள். இவை உங்கள் சாதனங்களைப் பழுது படுத்தலாம்.
  • நேரடியாக எதையும் சாதனத்தின் மேல் தெளிக்காதீர்கள்.
  • துடைக்க சொரசொரப்பில்லாத, மிருதுவான LINT FREE துணியை உபயோகியுங்கள்.
  • துணியை லேசாக ஈரமாக்கிக் கொள்ளுங்கள், நனைக்க வேண்டாம். சிறிது சோப் எடுத்து துணியின் மீது கையால் தடவிக் கொள்ளுங்கள்.
  • சாதனத்தை பலமுறை துடைக்கவும்.
  • CHARGING SOCKETS, EARPHONE SOCKETS, KEYBOARDS இவற்றின் இடைவெளியில்  ஈரமாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
  • உங்கள் சாதனத்தை சுத்தமான, உலர்ந்த துணியால் துடைக்கவும்
  • சில சாதன தயாரிப்பாளர்கள் கடினமான, NON POROUS பாகங்களைத் துடைக்க 70% ISOPROPYL ALCOHOL துடைப்பான்களை சிபாரிசு செய்கிறார்கள்.
  • கிருமி நீக்கம் செய்வது பற்றி அதன் தயாளிப்பார்களிடம் செக் செய்து கொள்ளுங்கள். சில கிருமி நாசினிகள் உங்கள் உபகரணங்களை பாதிக்கக் கூடும்.

டிஜிட்டல் பாதுகாப்பு:

  • COVID-19 பெருந்தொற்று  தொடர்பான ரிப்போர்ட் செய்வதனால் பத்திரியாளர்கள்  ஆன்லைன் விரோதப் போக்கை அதிகமாக எதிர்கொள்ளக் கூடும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இந்த எதிர்ப்பு தடுப்பூசிக்கு எதிரான குழுக்களிடமிருந்தும் முகக்கவசம் அணிவதை எதிர்க்கும் மக்களிடமிருந்தும் உருவாகும். தாக்குதல்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான CPJ யின்  சிறந்த நடைமுறைகளை பரிசீலினை செய்யவும்.
  • COVID-19 பரவுவதைக் கண்காணிப்பதற்காக அரசாங்கங்களும் தொழில்நுட்ப நிறுவனங்களும் SURVEILLANCE அதிகளவில் பயன்படுத்துகின்றன. சிட்டிசன் லேப் அறிக்கையின் படி, பத்திரிகையாளர்களை குறிவைக்கப்  பயன்படுத்தப்படும் PEGASUS எனப் படும் ஒரு ஸ்பைவேர் உருவாக்கிய NSO குழுமமும் இதில் அடங்கும். இந்த சுகாதார நெருக்கடி முடிந்தபின் மக்களைக் கண்காணிக்க  target journalists , இந்த கண்காணிப்பு நுட்பங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பது குறித்து சிவில் உரிமைகள் குழுக்கள் கவலை கொண்டுள்ளன. டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் இந்த உலகளாவிய முன்னேற்றங்களை தங்கள் இணையதளத்தில் கண்காணித்து வருகிறது.
  • தொடரும் இந்த தொற்றுப் பிரச்சனையை தனி நபர்களையும் நிறுவனங்களையும் குறி வைக்கும் குற்றவாளிகள் தடுப்பூசி சம்பந்தப் பட்ட இணைய தளங்களை scam உருவாக்க உபயோகிக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. எனவே இணைப்புகளைக் கிளிக் செய்வதற்கு முன் அல்லது COVID-19 பற்றிய தகவல்களைக் கொண்ட ஆவணங்களைப் பதிவிறக்கும் முன்  சற்று சிந்தியுங்கள். எலக்ட்ரானிக் பிரான்டியர் பௌண்டேஷனின். படி,   உங்கள் சாதனங்களில் தீம்பொருள் நிறுவப்படுவதற்கு வழிவகுக்கும் அதிநவீன ஃபிஷிங் தாக்குதல்களுடன்  குறிவைக்கிறார்கள்.. COVID – 19 சம்பந்தமான எந்த இணையத் தொடர்பையும் SOCIAL MEDIA வில் உபயோகப் படுத்தும் போதும் தகவல் அனுப்பும் பயன் பாட்டு அமைப்புகளை (Apps) உபயோகப் படுத்தும் போதும் அது உங்கள் உபகரணங்களைத் தாக்கும் தீம்பொருள் ( malware) மூலம் பாதிக்கப்  பட்ட இணைய தளங்களுக்கு தொடர்பு ஏற்படுத்தலாம்.
  • இணையதள மாநாடு மற்றும் தனியுரிமைக் கொள்கை பற்றித் தெரிந்து கொள்ளுவதன் மூலம், இந்த மாதிரியான சேவைகள் உங்கள் புள்ளி விவரங்களை என்ன செய்கின்றன, எப்படி அணுகுகின்றன, அவை எவ்வளவு பாதுகாப்பானவை என்று தெரிந்து கொள்ளுங்கள். வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் காலத்தில் ஹேக்கர்களால் இந்த சேவை குறி வைக்கப் படுகின்றன என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
  • கோவிட் -19 பெருந்தொற்று பரவுதல் தொடர்பாக எதேச்சாரிகார அரசு நாடுகளிருந்தோ அவை பற்றியோ செய்தி வெளியிடும் போது எச்சரிக்கையாக இருங்கள். அந்த அரசுகள் அந்த செய்திகளை நுணுக்கமாக கவனித்து வரலாம். சில அரசுகள் தொற்று பரவலின் தீவிரம் பற்றி மறைக்க முயலலாம் அல்லது ஊடகச் செய்திகளை CPJ குறிப்பிட்டுள்ள படி தணிக்கை செய்ய முயலலாம்.

பணியின் போது நடக்கும் குற்றம் மற்றும் உடல் பாதுகாப்பு:

  • நீங்கள் உங்கள் பணிக்காக அயல் நாடுகளுக்குப் பயணம் செய்ய முடியுமானால் அந்த இடத்தின் பாதுகாப்பு நிலை பற்றி ஆராய்ந்து தெரிந்து கொள்ளுங்கள். தொற்று பரவல் ஆரம்பித்ததிலிருந்து அவ்வப்போது உலகம் முழுவதும் சில வன்முறை சம்பவங்களும் எதிர்ப்புகளும் நடந்திருக்கின்றன. சில பத்திரிகையாளர்கள் பேச்சால் தாக்கப் பட்டது மற்றும்  வன்முறைகளுக்கு இலக்கானது பற்றி குறிப்பிட்டுள்ளனர். எனவே பாதுகாப்பு பற்றி கவனமாக இருங்கள்.
  • அதுவும் கிராமப்புற பகுதிகளிலிருந்து செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபடுவதானால் மிகவும் கவனமாக இருங்கள். அங்கிருக்கும் மக்கள் வெளியிலிருந்து வருபவர்கள் பற்றிய பயத்தினாலும் தொற்றினால் பாதிக்கப் பட்டவர்கள் என்ற எண்ணத்தினாலும் உங்களைச் சந்தேகப் படலாம்.
  • எதேச்சாதிகார அரசு நாடுகளில் பணிக்குச் செல்லும் பத்திரிகையாளர்கள் கோவிட் -19 தாக்கம் பற்றிய செய்தி சேகரிப்பு பணியில் இருக்கும் போது தடுப்புக் காவல், சிறைப் பிடிக்கப் படுதல், நாடு கடத்தப்  படுதல் ஆகியவற்றுக்கு ஆளாக நேரலாம். 

சர்வதேசப் பயணப் பணிகள்:

உலகளாவிய கட்டுப் பாடுகளினால் அயல் நாட்டுப் பயணம் சவாலாக உள்ளது, அயல் நாட்டுப் பணிகளில் ஈடுபட நேர்ந்தால்  கவனிக்க வேண்டியவை:

  • நீங்கள் செல்ல வேண்டிய இட்த்தில் இப்போது உள்ள அல்லது வரக்கூடிய பயணத் தடைகளைப் பற்றி விசாரியுங்கள்.  அவை மிகக் குறுகிய கால அவகாசத்தில் மாற்றப் படலாம்.
  • ஒரு நாட்டின் பல பகுதிகளில் தொற்று முடக்கம் சம்பந்தமான கட்டுப் பாடுகள் மற்றும் ஊரடங்குச் சட்டங்கள் மாறுபடலாம். அந்தப் பகுதிக்கான முடக்க ஏற்பாடுகள் குறுகிய கால அறிவிப்பு அல்லது அறிவிப்பில்லாமலே மாற்றப் படலாம், எனவே அந்தப் பகுதி செய்திகளுக்கான ஆதாரங்களைக் கவனித்து வாருங்கள்.
  • நீங்கள்  பயணப் படும் அல்லது திரும்பி வரும் இடத்தைப் பொறுத்து, திரும்பி வந்ததும் உள்ள தனிமைப் படுத்துதல் விதிகள் அறிமுகப் படுத்தப் படுவதும், மாற்றப் படுவதும் அறிவிப்பு இல்லாமலோ, குறுகிய கால அவகாசத்திலோ நேரலாம்.
  • நீங்கள் பயணப் படும் இடத்திலுள்ள அனைத்து மருத்துவ வசதிகள் பற்றிக் குறித்து வையுங்கள். சுகாதார ஊழியர்கள் அறிவிப்பு இல்லாமலோ, குறுகிய கால அவகாசத்திலோ போராட்டம் மற்றும் பணி நிறுத்தத்தில் ஈடுபடலாம்.
  • PPE கிடைப்பதில் பிரச்சனை இருக்கலாம், கிடைக்காமல் போகலாம், அதன் தரம் சந்தேகத்துக்குரியதாக இருக்கலாம். பணிக்குச் செல்வதற்கு முன் இது பற்றிய விவரங்களை விசாரித்துத் தெரிந்து கொள்ளுங்கள் அல்லது தேவைக்கேற்ப உங்களோடு எடுத்துச் செல்லுங்கள்.
  • முடியுமானால் பணிக்காகக் கிளம்புவதற்கு முன் கோவிட் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் செல்லும் இடத்திற்கேற்ப அனைத்து தடுப்பூசி, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளும் சரியான முறையில் செய்யப் பட்டுள்ளன என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.
  • உங்கள் பயணக் காப்பீட்டுப் பாலிஸியை சரி பார்க்கவும். கோவிட் -19 சம்பந்தமான பயணங்களுக்கு காப்பீடு மறுக்கப் படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  பல நாடுகளின் அரசாங்கங்கள் வெளிநாட்டுப் பயணங்களுக்கு எதிராக எச்சரிக்கைகள் மற்றும் அறிவுரைகளை பல நிலைகளில் வெளியிட்டுள்ளன என்று தெரிந்து கொள்ளுங்கள்.
  • நீங்கள் பங்கேற்கப் போகும் நிகழ்வுகளின் அப்போதைய நிலையை அறிந்து கொள்ளுங்கள. பல நாடுகள் பொதுக்கூட்டங்களை அல்லது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் மக்கள் கூடுவதை முற்றிலுமாக தடை செய்து விட்டன.
  • உலகம் முழுவதிலும் பல தேச எல்லைகள் மூடப் பட்டு உள்ளன. திறக்கப் படும் எல்லைகளும் முன்னறிவிப்பின்றி மூடப்படுகின்றன. எனவே இவை உங்கள் பயணத்தின் அவசரகாலத் திட்டங்களில் கவனிக்கப் பட வேண்டிய முக்கியமான விஷயம்.
  • உடல் நலக்குறைவின் போது பயணிக்காதீர்கள். அநேகமான சர்வதேச மற்றும் பிராந்திய விமான நிலையங்கள், மற்றும் போக்குவரத்து மையங்களில் உடல் நல சோதனை தீவிரமாக்கப் பட்டுள்ளது.
  • செய்திகள் மூலம் கோவிட் -19 அநேக விமான சேவை நிறுவனங்களுக்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிய வருகிறது. அதனால் முழுவதும் திரும்பக் கூடிய வகையில் விமான டிக்கெட்டுகளை வாங்குங்கள்.
  • நீங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு சமீபத்திய விஸா சட்டங்களை அறிந்து கொள்ளுங்கள். நிறைய நாடுகள் விஸா வழங்குவதை நிறுத்தியுள்ளன.
  • நீங்கள் கோவிட்- 19 ஆனால் பாதிக்கப் படாதவர் என்பதற்கு மருத்துவ சான்றிதழ் நீங்கள்  செல்லும் நாட்டிற்குத் தேவைப் படுகிறதா என்று அறிந்து கொள்ளுங்கள்.
  • உலக முழுவதும் உள்ள விமான நிலையங்களில் சுகாதார சோதனைகளுக்கு சிறிது அதிக நேர இடைவெளி இருக்குமாறு உங்கள் பயணத்திட்டங்களை வகுத்துக் கொள்ளுங்கள். விமான நிலையங்களில் உடல் நல சோதனை, உடல் உஷ்ண பரிசோதனை ஆகியவற்றுக்கு நேரம் தேவைப் படும். ரயில் நிலையங்கள், துறைமுகங்கள், பஸ் நிலையங்கள் ஆகியவற்றுக்கும் இது பொருந்தும்.

பணிக்குப் பிறகு:

  • நீங்கள் – இந்த நோய் பரவலாக இருந்த ஒரு இடத்திலிருந்து திரும்பி வருகிறீர்கள் என்றால், நிச்சயமாக நீங்கள் சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கும். இது சம்பந்தப்பட்ட விவரங்களுக்கு அரசாங்கத்தின் ஆலோசனைகளைப் பார்க்கவும்
  • COVID-19 பற்றிய சமீபத்திய புதுப்பிப்புகள் மற்றும் தகவல்களைக் கண்காணிக்கவும். அத்துடன் நீங்கள் புறப்படும் நாடு மற்றும் செல்லும் நாடு இரண்டிலும் செயல்படுத்தப்படும் தனிமைப்படுத்தல்  மற்றும் சுயத் தனிமைப்படுத்தல்  நடைமுறைகளை கண்காணிக்கவும் 
  • நீங்கள் இருக்கும் நாட்டில் தொற்று வீதத்தைப் பொறுத்து, நீங்கள் திரும்பி வந்த 14 நாட்களுக்கு நீங்கள் சந்தித்த  நபர்களின் பெயர்கள் / எண்களைக் கொண்ட ஒரு டைரியை வைத்திருப்பது நல்லது. உங்களுக்கு அறிகுறிகள் தோன்றினால் நீங்கள் சந்தித்த/ உங்களுடன் தொடர்பிலிருந்த இந்த நபர்களை தேடுவதில் உதவியாக இருக்கும்.

உங்களுக்கு நோயின் அறிகுறிகள் தோன்றினால்:

  • எவ்வளவும் லேசாகவானாலும் COVID-19 இன் அறிகுறிகள்  உங்களுக்குத் தோன்றினால், உடனே உங்கள் நிர்வாக குழுவுக்குத் தெரிவிக்கவும். உங்கள் பணியின் இறுதி இலக்கிலிருந்து உங்கள் வீட்டிற்குச் செல்லப்  பொருத்தமான போக்குவரத்து ஏற்பாட்டுக்கு அவர்களுடன் பேசுங்கள். டாக்ஸியில் போவதை தவிருங்கள். 
  • உங்களையும் உங்கள் சுற்றி இருப்பவர்களையும் பாதுகாக்க WHOCDC அல்லது உள்ளூர் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையைப் கண்டிப்பாக பின்பற்றுங்கள்
  • உங்களுக்கு இந்த நோயின் அறிகுறிகள் தொடங்கியதிலிருந்து குறைந்தது 7 நாட்களுக்கு (இந்தக் கால வரையறை அரசாங்கத்தின் ஆலோசனைப் படி அவ்வப் போது மாறலாம்) உங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம். அவ்வாறு செய்வது உங்கள் சமூகத்தில் மற்றவர்களுக்கு நீங்கள் இந்த நோயை பரப்பாமல் தவிர்க்க உதவும்.
  • முன்கூட்டியே திட்டமிட்டு மற்றவர்களிடம் உதவி கேட்கவும். உங்களுக்கு தேவையான பொருட்களை உங்கள் முதலாளி, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் கேளுங்கள்.  அவற்றை உங்கள் முன் வாசலுக்கு வெளியே வைத்து விட சொல்லுங்கள். 
  • நீங்கள் மற்றவர்களுடன் ஒரே இடத்தில் இருந்தால் அனைவருக்கும் தனிமைப் படுத்தும் காலம் தேவைப் படும். இதற்கான வழிகாட்டி இங்கே  கொடுக்கப் பட்டுள்ளது. குளியலறை, கழிவறை, சமையலறை ஆகியவற்றை உபயோகிப்பதில் அதிக்க் கவனம் செலுத்தப் பட வேண்டும்.
  • முடிந்தவரை உங்கள் வீட்டிலுள்ள மற்றவர்களிடமிருந்து குறைந்தபட்சம் 2 மீட்டர் தொலைவில் இருங்கள். 

CPJ  வின் பத்திரிகையாளர்களுக்கும் செய்தி அறைகளுக்கும் உடல் ரீதியான, மற்றும் மன ரீதியான அடிப்படை உபகரணங்கள், வழிகள் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளது. மற்றும் தேர்தல் சம்பந்தமான விவர்ங்களையும் கொண்டுள்ளது.

எடிட்டரின் குறிப்பு: இந்த அறிக்கை 20, Feb, 2020 யில் முதன் முதலாக வெளியிடப் பட்ட்து. அதற்குப் பிறகு அடிக்கடி மாற்றி அமைக்கப் பட்டுள்ளது.  வெளியீட்டுத் தேதி சமீபத்திய வெளியீட்டைக் குறிக்கிறது.